×

போதைப்பொருள் புகார் - தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத்தி ஆகியோருக்கு சம்மன்...

 

பாலிவுட்டுக்கு அடுத்து கன்னட திரையுலகில் போதை பொருள் புலங்குவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதுவும், சுஷாந்த் தற்கொலைக்கு பின் இந்த விவகாரம் மிகவும் சூடுபிடித்துள்ளது.

பல நடிகர், நடிகையர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் திரைப்படத்தில் நடித்தவர் ராகினி திவேதி போலீசாரிடம் சிக்கினார். அதேபோல், மலையாளம், தமிழிலில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சானா கல்ராணி வீட்டிலும் போலீசார் சோதனை செய்தனர். இவர் தமிழில் ‘ஒரு காதல் செய்வீர்’ திரைப்படத்தில் நடித்தவர்.

இந்நிலையில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்துள்ள ரகுல் ப்ரீத்தி சிங், சாரா அலிகான், ஷ்ரத்தா  கபூர் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

From around the web

Trending Videos

Tamilnadu News