Connect with us

Cinema News

நயன்தாராவே ஒண்ணும் கொடுக்கல!.. கல்யாணம் ஆன பின்னரும் ஷாருக்கான் கிட்ட ஃபீலிங்கை கன்ட்ரோல் பண்ண முடியல போல!..

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் 700 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. அந்த நிகழ்ச்சியில் நடிகை தீபிகா படுகோனே ஷாருக்கானுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஜவான் திரைப்படத்தில் மகன் ஆசாத்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகம் ஆகியிருந்தார். ஆனால் நேற்று நடந்த சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவில்லை. வழக்கம்போல சினிமா பட புரோமோஷன்களை தவிர்த்து வருவது போலவே சக்சஸ் கொண்டாட்டங்களையும் தவிர்த்து வருகிறார் நயன்தாரா.

இதையும் படிங்க: ஒரே வருஷத்துல 3000 கோடியா!.. பலே ஆளா இருக்காரே இந்த பாலிவுட் பாட்ஷா.. அடுத்த சம்பவம் லோடிங்!..

அட்லி இயக்கிய ஜவான் திரைப்படத்தில் அப்பா விக்ரம் ரத்தோர் ஷாருக்கானுக்கு ஜோடியாக சில காட்சிகள் மட்டுமே நடித்துச் சென்ற நடிகை தீபிகா படுகோன் நேற்றைய சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் கவர்ச்சிகரமாக சேலையை உடுத்திக் கொண்டு இளைஞர்களை தொக்காக தூக்கும் திட்டத்துடன் அழகு பதுமையாக வந்திருந்தார்.

இந்த ஆண்டு தொடர்ந்து பேக் டு பேக் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளை குவித்து வரும் ஷாருக்கான் கோட் சூட் அணிந்து கெத்தாக வந்த நிலையில் அவரைக் கண்டதுமே அவரது அழகில் மயங்கி தனது அன்பை பொழியும் விதமாக கன்னத்தில் பச்சக் என ஒரு முத்தம் கொடுத்தார் தீபிகா படுகோன்.

இதையும் படிங்க: 6 ஃபிளாப்புக்கு பிறகு விஷாலுக்கு வெற்றி கிடைத்ததா?.. மார்க் ஆண்டனி முதல் நாள் வசூல் எவ்வளவு?

ரன்வீர் சிங்குடன் தீபிகா படும் திருமணமான நிலையிலும் தொடர்ந்து ஷாருக்கான் படங்களின் உச்சகட்ட கவர்ச்சியின் நடித்து வருகிறார். இந்நிலையில், ஆஃப் ஸ்கிரீனில் ஷாருக்கானுக்கு தீபிகா படுகோன் முத்தம் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் மெயின் ஹீரோயினான நயன்தாராவே இப்படி வெளிப்படையாக கிஸ் அடிக்காத நிலையில், தீபிகா படுகோன் கன்னத்தில் முத்தம் கொடுத்திருப்பது குறித்து ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top