அஜித் நடிப்பில் அடுத்து ரிலீஸ்க்கு தயாராகி உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை H.வினோத் இயக்கியுள்ளார். போனிகபூர் தயாரித்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இந்த மூவர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அடுத்து இணையவுள்ளது என அனைத்தும் தெரிந்த விஷயமே.
ஆனால், தெரியாத விஷயம் என்றால் அது வலிமை ரிலீஸ் தேதி தான். இந்நேரம் வலிமை தியேட்டரில் ரிலீஸ் ஆகி ஒரே கொண்டாட்டமாக இருந்திருக்கும். ஆனால், படத்தின் ரிலீஸ் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.
ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு நீக்கிவிட்டால், படத்தின் ரிலீஸ் இருக்கும் என கூறப்பட்டது. அதன் படி தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் வரும் வாரங்களில் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்காது என கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன்- RRR-ஐ பின்தொடரும் வலிமை.! இந்த முடிவு சரியா வருமா?!
அதனால், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துவிட்டதாம்.
மார்ச் 18ஆம் தேதி பட ரிலீஸ் இருக்கும் என கூறப்படுகிறது. அதே தேதியில் RRR படம் வெளியாகும் என கூறப்பட்டது. (இரண்டு தேதியில் ஒன்று). இல்லையென்றால் அந்த தேதியில் பிரபாஸின் ராதேஷியாம் வரும் என கூறப்படுகிறது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…