Connect with us
Delhi Ganesh

Cinema News

எங்களுக்கு இங்க மரியாதையே இல்ல- கடுப்பான டெல்லி கணேஷ்… ஏன் தெரியுமா?

டெல்லி கணேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகராக திகழ்ந்து வருகிறார். காமெடி, வில்லத்தனம் என பன்முக கதாப்பாத்திரங்களில் கலக்குபவர் டெல்லி கணேஷ். எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தக்கூடியவர் இவர்.

1977 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “பட்டினப் பிரவேசம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் டெல்லி கணேஷ். அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 400 திரைப்படங்களில் நடித்துள்ளார் டெல்லி கணேஷ். இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாது ஒரு சிறந்த டப்பிங் கலைஞரும் கூட.

கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்தன் தமிழில் “மழலை பட்டாளம்” என்ற திரைப்படத்தில் நடித்தார். அதில் விஷ்ணுவர்தனுக்கு குரல் கொடுத்தவர் டெல்லி கணேஷ். அது மட்டுமல்லாது சிரஞ்சீவி, பிரதாப் போத்தன் ஆகியோருக்கும் குரல் கொடுத்துள்ளார் டெல்லி கணேஷ். திரைப்படங்களில் மட்டுமல்லாது பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் டெல்லி கணேஷ்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் டெல்லி கணேஷிற்கு ஒரு சிறப்பு விருந்து வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “பொதுவாக என்னை எந்த விருது விழாவிற்கும் யாரும் அழைத்தது கிடையாது. எனக்கு விருது வழங்கியதும் கிடையாது. ஏனென்றால் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்களை யாரும் மதிப்பதில்லை. இதை சொல்வதால் யாரும் கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை. மலையாள சினிமா உலகில் குணச்சித்திர நடிகர்களை கௌரவிப்பார்கள். ஆனால் இங்கே எங்களை விருது விழாவிற்கு அழைக்கக்கூட மாட்டார்கள்” என கூறியிருந்தார்.

author avatar
Arun Prasad
Continue Reading

More in Cinema News

To Top