×

இன்று முதல் 2 ஜி அலைக்கற்றை வழக்கில் நாள்தோறும் விசாரணை   - டெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் இன்று முதல் தினமும் விசாரணை நடைபெற உள்ளது என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்தது.

 

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் இன்று முதல் தினமும் விசாரணை நடைபெற உள்ளது என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்தது.

2ஜி அலைக்கற்றை வழக்கில் நடந்த ஊழலில் ராசா, கனிமொழி உள்பட 17 பேருக்கு தொடர்பு இருப்பதாக வழக்கு பதியப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த 2017ஆம் ஆண்டில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 17 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ அமலாக்கத் துறை மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி வரும் நவம்பர் மாதம் முதல் ஓய்வு பெற இருப்பதால் இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டு இருந்தது.இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இன்று முதல் தினந்தோறும் 2ஜி அலைக்கற்றை வழக்கு விசாரணை செய்யப்படும் என வாக்குறுதி அளித்தது.

அதன்படி இன்று முதல் இந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதில் ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இருப்பதால் திமுக கலக்கம் அடைந்துள்ளது. இந்த மேல் முறையீட்டு வழக்கிலும் ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு விடுதலை கிடைக்குமா கிடைக்காதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

From around the web

Trending Videos

Tamilnadu News