×

கோடிகளைக் கொட்டும் டோலிவுட் புரடியூசர்ஸ்... இன்ட்ரஸ்ட் காட்டாத விஜய் சேதுபதி

மாஸ்டர் மற்றும் உப்பன்னா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து டோலிவுட்டில் இருந்து விஜய் சேதுபதிக்கு நிறைய ஆஃபர்கள் குவிகின்றனவாம்.
 

விஜய்யுடன் மாஸ்டரில் பவானியாக மோதிய விஜய் சேதுபதி கோலிவுட் மட்டுமல்லாது இந்திய அளவில் ரசிகர்களை ஈர்த்தார். படத்தின் மாஸ் வெற்றி அவருக்கு வேற லெவல் மார்க்கெட்டை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல், தெலுங்கில் புதுமுகங்கள் நடித்த உப்பன்னாவில் காதலை வெறுக்கும் ஹீரோயினின் தந்தையாக நெகட்டிவ் முகம் காட்டிய விஜய் சேதுபதியை டோலிவுட் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. 


இதனால், அவருக்கு டோலிவுட்டில் இருந்து மட்டும் எக்கச்சக்க ஆஃபர்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதியை போனிலும் நேரிலும் பல தெலுங்கு தயாரிப்பாளர்கள் தங்கள் படத்துக்குப் புக் செய்ய துடித்துக் கொண்டிருக்கிறார்களாம். அப்படி சமீபத்தில் தனக்கு வந்த பல ஆஃபர்களை விஜய் சேதுபதி வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். விஜய் சேதுபதிக்காக ஹிரோக்களை விட அதிக சம்பளம் தர தயாரிப்பாளர்கள் ரெடி என்றும் சொல்லியிருக்கிறார்கள். 


ஆனால், அடுத்த இரண்டு வருடங்களுக்கு கால்ஷீட் ஃபுல் என்பதால் டோலிவுட் வாய்ப்புகளை விஜய் சேதுபதி ஏற்கவில்லை. இதனால், டோலிவுட் புரடியூசர்ஸ் விஜய் சேதுபதியின் கால்ஷீட்டுக்காகக் காத்துக் கிடக்கிறார்களாம்.  
 

From around the web

Trending Videos

Tamilnadu News