நடிகர் சிம்பு அடுத்ததாக கமலஹாசன் தயாரிப்பில் எஸ் டி ஆர் 48 படத்தில் நடிக்க உள்ள நிலையில் அந்த படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரிய சாமியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் வெற்றியை கொடுத்தது. அந்தப் படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான வெந்து தணிந்தது காடு படத்திற்காக உடல் எடையை வருத்திக்கொண்டு ஏற்றியும் இறக்கியும் ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்திருந்தார் சிம்பு.
இதையும் படிங்க: 3 மாசம் முண்டா பனியனோட போட்டோ வராது!.. தமிழ் ரசிகர்களுக்கு தண்ணி காட்டிய கிரண்!.. என்ன ஆச்சு தெரியுமா?
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வெந்து தெரிந்தது கால திரைப்படம் ஹிட் அடிக்கவில்லை. அதன் காரணமாக சிம்பு ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார். இயக்குனர் கெளதம் மேனன் உடன் அடுத்து பத்து தல படத்தில் நடித்து இருந்தாலும் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா உள்பட எதிலுமே கௌதம் மேனன் பற்றி சிம்பு பேசவே இல்லை. வெந்து தொலைந்தது காடு 2 வெளியாகவும் வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.
பத்து தல படத்திற்காக மீண்டும் உடல் எடையை அதிகரித்து சிம்பு ரிஸ்க் எடுத்து நடித்த நிலையிலும் அந்தப் படமும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. இந்நிலையில் அடுத்ததாக ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ள பிரம்மாண்ட படம் எஸ்டிஆர் 48 விரைவில் உருவாக உள்ளது.
இதையும் படிங்க: ஐ யாம் சாரி.. ஐ யம் பிஸி!.. அவரை முடிச்சிட்டு வரேன்.. நெல்சன் பிடித்த புது ரூட்!
நடிகர் சிம்பு அந்த படத்திற்காக வெளிநாட்டில் மார்ஷியல் ஆர்ட்ஸ் எல்லாம் கற்றுக் கொண்டு வந்த நிலையில் தற்போது சிம்பு உடன் இருக்குற தேசிங்கு பெரியசாமி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தப் புகைப்படத்தில் சிம்பு அணிந்திருந்த சட்டையில் புலியின் உருவம் பிரம்மாண்டமாக பிரிண்ட் செய்யப்பட்ட நிலையில் டைகர் அக்காவுக்கும் என ரசிகர்கள் அந்த போட்டோவை #SilambarasanTR ஹாஷ்டேக் போட்டு ட்ரெண்டு செய்து வருகின்றனர்.
TVK Vijay:…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…