Categories: Cinema News latest news throwback stories

விஜய், அஜித் படம் ஓடாது என நினைத்தேன்… ஆனா நடந்ததே வேற! ஆச்சர்ய தகவலை சொன்ன தேவா!

தமிழ் சினிமா படங்களை எப்போதுமே கணிக்க முடியாது. ஓடுமென நினைக்கும் எல்லா படங்களுமே வசூல் எடுத்து விடாது. வசூல் எடுத்த படங்கள் விமர்சன ரீதியாக பாசிடிவ்வாக அமையாது. ஆனால் இந்த படம் தோல்வி அடைந்து விடும் என நினைக்கும் படங்கள் மிகப்பெரிய வசூலையும் பாசிட்டிவ் விமர்சனங்களையுமே பெறும்.

இதையும் படிங்க: வெறித்தனமான லுக்கில் விஜயகாந்த் மகன்!.. தெறிக்கவிடும் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ..

ரசிகர்களுக்கு மட்டுமல்ல பிரபலங்களுக்குமே படங்களில் இருக்கும் கருத்துகள் மாறியே நடக்கும். அப்படி தான் இசையமைப்பாளர் தேவா தான் மியூசிக் இல்லாமல்பார்த்த சில படங்கள் தோல்வி அடைந்து விடும் என நினைத்தேன். ஆனால் என் நினைப்புக்கு எதிராக படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில் இருந்து, நான் விஜய் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய குஷி படத்துக்கும் இசையமைத்து இருந்தேன். ஆனால் அப்படத்தின் கிளைமேக்ஸை பார்க்கும் போது ரொம்பவே நீளமாக எங்கையோ தடுப்பது போல ஒரு உணர்வை தான் கொடுத்தது. இதை நான் எஸ்.ஜே.சூர்யாவிடம் கூட சொன்னேன்.

இதையும் படிங்க: எல்லோர் முன்னிலையிலும் கன்னத்தில் பளார்விட்ட விஜயகாந்த்.. வன்மம் வளர்த்து பழிவாங்கிய வடிவேலு!..

ஆனால் சூர்யா எடிட்டிங்கில் சரி செய்து விடலாம் என்றார். அதுப்போல செய்து படத்தினை ரிலீஸ் செய்தார். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் போலவே அஜித் நடிப்பில் உருவான காதல் கோட்டை படத்தின் மீதும் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை.

கடைசி வரையும் இவர்கள் பார்க்கவே இல்லையே. எப்படி கிளைமேக்ஸ் சரியாக அமையும் என நினைத்தேன். ஆனால் என் நினைப்புக்கு எதிராக அப்படத்தின் கிளைமேக்ஸில் அஜித் சட்டையை கழற்றிய ஒரே காட்சியை வைத்து படத்தினையே வேற லெவலில் ஹிட் கொடுத்தது.

யாருமே கணிக்க முடியாத மாதிரி தான் படத்தினை எடுப்பார்கள். அந்த கதாபாத்திரத்தின தன்மையை சரியாக ரசிகர்களிடம் கடத்திவிட்டாலே படம் மிகப்பெரிய அளவில் சூப்பர்ஹிட்டாக அமைந்து விடும் என்றார்.  

Published by
Shamily