ரம்பா சொன்னதுக்கு பதிலடி கொடுத்த தேவயாணி.. அதான் இப்படி இருக்காங்க

by Rohini |   ( Updated:2025-02-05 01:30:32  )
ரம்பா சொன்னதுக்கு பதிலடி கொடுத்த தேவயாணி.. அதான் இப்படி இருக்காங்க
X

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக 90கள் காலகட்டத்தில் இருந்தவர் நடிகை தேவயாணி. திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் இன்னும் நடித்துக் கொண்டுதான் வருகிறார். ஆனால் இவருடைய சக நடிகையான ரம்பா திருமணத்திற்கு பிறகு எந்த படங்களிலும் நடிக்கவே இல்லை. ஆனால் சமீபகாலமாக பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகும் நடிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் ரம்பாவை பொறுத்தவரைக்கும் ஒரு காலத்தில் கனவுக்கன்னியாக தொடையழகியாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர்.

ஏன் ரம்பா நடிக்கவில்லை என்றும் அதை பற்றி தேவயாணியிடம் கேட்ட போது தேவயாணி கொடுத்த பதிலும் இதோ: ரம்பாவிடம் நீங்கள் மறுபடியும் எப்பொழுது ரீ எண்ட்ரி கொடுக்க இருக்கிறீர்கள் என்ற கேள்வியை கேட்டபோது அதற்கு ரம்பா ரீ எண்ட்ரி கொடுக்க நான் தயார். ஆனால் எனக்கு நல்ல கேரக்டர்ஸ் கொடுக்க டைரக்டர் தயாரா? என கேட்டார். அது சரியான பதிலாக தெரிந்தது. ஏனெனில் தன்னை கூப்பிடும்போது அம்மா கேரக்டருக்கு கூப்பிடுகிறார்கள், சின்ன சைடு ரோலுக்கு கேட்கிறார்கள்.

அதில் ஒரு பிராமிசிங்கான கேரக்டரே இல்லை. அதை ஏன் நான் பண்ணனும், ஆனால் சினிமாவில் நடிக்க நான் தயார் அந்த மாதிரி கேரக்டர்ஸ் இன்னும் எனக்கு வரவில்லை என கூறினார். அப்படியே பார்த்தால் இப்போது நீங்கள் இன்றுவரை சினிமாவில் உங்களுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டே இருக்கிறீர்கள். ஏதாவது ஒரு படங்களில் உங்களை பார்க்க முடிகிறது. எது உங்களை இந்த சினிமாவில் நிரந்தரமாக வைக்க உதவியது என்ற கேள்வி தேவயாணியிடம் நிரூபர் கேட்டார் .

அதற்கு தேவயானி கொடுத்த பதில் இதோ: என்னை பொறுத்த வரைக்கும் சினிமா என்பது ஒரு ஆர்டிஸ்ட்க்கு கூடிய சீக்கிரம் முடிய போகிற கேரக்டர் கிடையாது .அவர்கள் நடிக்கும் கேரக்டர்களுக்கு முடிவே கிடையாது .அவ்வளவு இருக்கிறது கேரக்டருக்கு. ஹீரோயின் ஆக வந்தோம். ஹீரோயின் ஆக நடிச்சோம். நிறைய வெற்றி படங்களை கொடுத்தோம். அதன் பிறகு திருமணம் ஆனது. திருமணத்திற்கு பிறகு அடுத்த கட்டத்திற்கு வந்தோம் .ஒரு ஹீரோயினாகவே நம்மை வைத்து படம் எடுப்பது என்பது பெரிய விஷயம்.

அது சில பேருக்கு தான் அமையும். எல்லோருக்கும் அமையாது. சில ஹீரோயின்ஸ்களுக்கு மட்டும்தான் அமையும் .நான் இந்த மாதிரி எந்த ஒரு கண்டிஷனும் வைத்ததில்லை. என்னோட திருமணத்திற்கு அடுத்த நாளே நான் நடிக்க வந்து விட்டேன். கல்யாணத்திற்கு பிறகு நிறைய படங்கள் நடித்திருக்கிறேன் .சில படங்களில் சின்ன ரோல். சில படங்களில் ஒரு சீனில் வந்து போவது மாதிரியான காட்சி என நடித்திருக்கிறேன்.


சின்ன ரோலாக நடித்திருப்போம். ஆனால் அது பெரிய அளவில் பேசப்படும் .சில படங்களின் படமுழுக்க வந்தாலும் நம்முடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படாது. என்னைப் பொறுத்த வரைக்கும் நாம் ஒரு ஆர்டிஸ்ட். ஏதோ ஒரு டைரக்டர் அல்லது ரைட்டர் நம்மை நினைத்து ஒரு கதை எழுதுகிறார். அப்படி இருக்கும் பட்சத்தில் அவருடைய மனதில் நாம் இன்று வரை இருந்து கொண்டே இருக்கிறோம் என்றால் அதுதான் நமக்கு கிடைத்த ஒரு வெற்றி என நான் நினைக்கிறேன் .சரி நம்மை நினைத்து ஒரு கதை எழுதுகிறார்களே என்று தான் பார்க்க வேண்டும் என தேவயானி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

Next Story