Categories: Cinema News latest news throwback stories

டீக்கு பதிலா சும்மா கதை சொன்ன ராஜகுமாரன்… நான் தான் நடிப்பேன் அடம் பிடித்த தேவயானி.. என்ன படம் தெரியுமா?

தமிழ் சினிமாவின் காதல் ஜோடிகளான தேவயானி மற்றும் ராஜகுமாரன் இருவரும் முதன்முதலாக இணைந்த படத்தில் சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு நடந்து இருக்கிறது.

தமிழ் சினிமாவில் தேவயானி நல்ல படங்களில் நடித்து கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் தான் அவருக்கு சூர்ய வம்சம் படம் கிடைத்திருக்கிறது. விக்ரமன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சரத்குமார், ராதிகா ஆகியோர் முக்கிய வேடம் ஏற்று நடித்தனர். பெரிய அளவில் ஹிட் கொடுத்த இப்படத்தில் விக்ரமனுக்கு உதவி இயக்குனராக இருந்தவர் ராஜகுமாரன்.

தேவயானி

படத்தின் கதாபாத்திரங்களுக்கான கண்டினியூட்டி பாக்கும் வேலையும் ராஜகுமாரன் உடையது தானாம். இதனால் அடிக்கடி தேவயானியுடன் பேசும் நிகழ்வு நடைபெறுமாம். தொடர்ச்சியாக இருவரும் நல்ல நட்பு ஒன்று உருவாகி இருக்கிறது. இருந்தும் அது ஒரு எல்லையில் தான் இருவரும் வைத்துக் கொண்டார்களாம்.

ஒருமுறை படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்த நிலையில், வீதியில் ராஜகுமாரனை சந்தித்து இருக்கிறார் தேவயானி. அப்போது மரியாதை நிமித்தமாக தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றாராம். அவரும் வீட்டுக்கு சென்று இருக்கிறார். இருவரும் பேசிக்கொண்டு இருந்த போது, டீ குடிக்க கொடுத்திருக்கிறார்கள். சரி சும்மா எப்படி குடிப்பது என நினைத்திருக்கிறார் ராஜகுமாரன். அதற்கு தன்னிடம் இருந்த நீ வருவாய் என படத்தின் கதையை கூறினாராம்.

தேவயானி

அதைக்கேட்ட தேவயானி, இக்கதையை படமாக எடுத்தால் நான் தான் நாயகியாக நடிப்பேன் எனக்கூறி விட்டாராம் தேவயானி. இதை தொடர்ந்து நீ வருவாய் என படத்தின் வேலைகள் துவங்கிய நிலையில், கதையை தேவயானியிடம் கூற சென்றாராம். அவரை கண்டவர், அந்த கண்ணு கதையா? என்றாராம். அவரும் ஆமாம் என்றிட உடனே படத்திற்கு ஓகே சொன்னாராம். படமும் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜூனியர் டெக்னீஷியன்னு நெனைச்சுட்டேன்; ஐ யம் சாரி – தேவயானி யாரிடம் மன்னிப்புக்கேட்டார் தெரியுமா?

Published by
Shamily