
Cinema News
Vijay TVK: ராயல் சல்யூட் பண்ண வேணாமா? விஜய்க்கு ஆதரவா பேசி சவுக்கடி வாங்கிய பிரபலம்
Vijay TVK: ஜனநாயகன் என்பது விஜயின் கடைசி படம். விஜய் இந்த சினிமாவிற்கு பண்ணியது மிகப்பெரியது. தமிழ் சினிமாவை பெரிய அளவில் உயர்த்தி இருக்கிறார். பெரிய லெவெலில் சாதனைகளும் பண்ணி இருக்கிறார். அவர் அரசியலுக்கு போகிறார் என்றால் நாம் எப்பொழுதுமே ஒரு ராயல் சல்யூட் பண்ண வேண்டும். அதை விட்டுவிட்டு கடைசி நேரத்தில் அவருடன் போட்டியிட்டு அவருடைய படத்திற்கு எதிராக ஒரு பெரிய படத்தை ஓட விட்டு அவரை வழி அனுப்புவது என்பது சரியாக இருக்குமா.
ராயல் சல்யூட் என்பது நீங்கள் பெரிய அளவில் சாதனைகளை பண்ணி இருக்கீங்க சார். தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்திருக்கிறீர்கள். உங்க படம் சோலோவாக வந்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்துவிட்டு அரசியலுக்கு போய் ஜெயித்துவிட்டு வாருங்கள் என்று சொல்வது தான் ராயல் சல்யூட். இதுதான் சினிமா துறையின் ரெஸ்பான்சிபிலிட்டி.
அவரை வாழ்த்தி வழி அனுப்ப வேண்டும். அவர் போகக்கூடாது என்பதுதான் நம்முடைய எண்ணம். சினிமாவில் தான் இருக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய எண்ணம். ஆனால் அவர் ஒரு முடிவை எடுத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக மாறப் போகிறேன் என வரும்போது ராயல் சல்யூட் பண்ணிவிட்டு சோலோவாக மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுக்க வேண்டும்.
மிகப்பெரிய வசூல் சாதனையை கொடுத்து அவரை நாம் கொண்டாடிவிட்டு அனுப்புகிறோம் என்பதுதான் நியாயமான வழி அனுப்புதல். வழி அனுப்பும் போது போட்டி போட்டுக் கொண்டு அவரை சிறுமைப்படுத்தி அவருடைய பாக்ஸ் ஆபிஸை குறைத்து, இதுவா வழி அனுப்புவது? இதில் எனக்கு உடன்பாடு இல்லை என தனஞ்செயன் கூறி இருக்கிறார். இந்த வீடியோ பெரிய அளவில் வைரலாக தனஞ்செயனின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் சரமாரியாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதாவது இந்திய நாட்டில் கட்சி ஆரம்பிப்பது என்ன அவ்வளவு பெரிய விஷயமா? என்னமோ ஒரு நாட்டிற்கு போருக்கு செல்லும் வீரனை போல் நடிகனை வழி அனுப்பி வைக்க வேண்டும் என்ற பேச்சு எல்லாம் எத்தனை கீழ் தரமான மனநிலை? நாளை விஜய் தோற்றதும் படத்தில் நடிக்க போறாரு, இப்பொழுதும் நடிச்சிகிட்டு தான் இருக்காரு. ஆனால் இவரு கூவுவதை பார்த்தால் என்னோமோ விஜய் பக்கத்து நாட்டுக்கு சென்று போர் செய்ய போகிற மாதிரி பில்டப் என நெட்டிசன்கள் கூறியிருக்கின்றனர்.