வீழா வீரா மாவீரா!.. 3 நாளில் 100 கோடி வசூலை கடந்த தனுஷின் ஓம்!..
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த நவம்பர் 20ம் தேதி வெளியான ஓம் திரைப்படத்தின் மூன்றாவது நாளின் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தில் தனுஷுடன் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசீருதீன் ஷா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செம்மரக்கடத்தலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இதற்கிடையே, ஓம் படத்திற்கு முன்பாக தனுஷ் நடிப்பில் வெளியான கர, குபேரா, தேரே இஷ்க் மே உள்ளிட்ட திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தற்போது லப்பர் பந்து படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் D56, வெற்றிமாறனுடன் தமிழ் முருகன், மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படம், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் என பல படங்களில் தனுஷ் நடிக்கவுள்ளார்.
மேலும், ஓம் படம் உலகளவில் ரூ.101.7 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொடர்ந்து தனுஷின் படங்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறாத நிலையில் ஓம் படம் தனுஷுக்கு வெற்றிப் படமாக அமையுமா? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
