Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தனுஷுடன் ஜோடி சேரும் தளபதியின் நண்பர்… அட இவரா?! ஆச்சரியத்தில் ரசிகர்கள்

கார்த்திக் நரேன் மற்றும் தனுஷ் இணைய இருக்கும் புது படத்தில் தளபதியின் நண்பரும் தமிழ் உலகின் மிகச் சிறந்த பாடலாசிரியராக கருதப்படும் பிரபலம் இணைந்து இருக்கிறார்.�

19ffc84eb888dfd54c109464d99afc9a-2

நடிகர் விஜயின் ஆஸ்தான பாடலாசிரியராக சமீபகாலங்களில் உருவெடுத்திருக்கும் பாடலாசிரியர் விவேக் கார்த்திக் நரேன் – தனுஷ் இணையும் #D43 படத்தில் திரைக்கதை, வசனகர்த்தாவாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் சாரா அலிகான் உள்ளிட்டோர் நடித்துள்ள அந்தரங்கி ரே படத்தின் ஷூட்டிங்கை தனுஷ் சமீபத்தில் முடித்தார். அதன்பிறகு,  மாரி செல்வராஜின் கர்ணன் உள்ளிட்ட சில படங்களில் மீதமிருக்கும் காட்சிகளுக்காக அவர் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அந்த வேலைகள் முடிந்தபின்னர், துருவங்கள் பதினாறு புகழ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் புதிய படத்தில்  அவர் நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத அந்தப் படம் #D43 என்று ரசிகர்களால் குறிப்பிடப்படுகிறது. 

லாக்டௌன் காலத்திலேயே இந்தப் படத்துக்கான மூன்று பாடல்களை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முடித்துவிட்டார். படத்தின் ஷூட்டிங் ஜனவரி இறுதியில் தொடங்க இருக்கிறது. படத்தின் திரைக்கதைக்காக ஏற்கனவே, எழுத்தாளர்கள் சுஹாஸ், ஷர்பு ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், பாடலாசிரியர் விவேக்கையும் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் படக்குழுவில் சேர்த்திருக்கிறது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் விவேக், `திரைக்கதையாசிரியராக முதல்முறை, வசனகர்த்தாவாக முதல் படம்… இந்தத் தலைமுறையின் மிகச்சிறந்த நடிகரான தனுஷ் படத்தில் பணிபுரிவது அதிர்ஷ்டம். இயக்குநர் கார்த்திக் நரேன், தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸுக்கு நன்றி’’ என இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷையும் டேக் செய்து உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார் விவேக். 

e82eb5f9bb13020397444cc0162a2676

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top