ஹாலிவுட் படத்தில் தனுஷ்.. குவியும் பாராட்டு!! மாமனாரையே மிஞ்சிட்டாரு போங்க!!
தம்மாத்துண்டு பையனாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட், ஹோலிவுட் என சிகரம் தொடும் தனுஷ் மீண்டும் பிரம்மாண்டமான ஹாலிவுட் படத்தில் இணைந்திருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

கிரே மேன் நாவலை தழுவி நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'தி கிரே மேன்' ஹாலிவுட் படத்தில் தற்போது தனுஷ் இணைந்திருக்கிறார். இதனை அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்களான ஆண்டனி, ஜோ ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர்.
தனுஷுடன் ரியான் கோஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், வாக்னர் மோரா, அனா டி ஆர்மஸ் ஜெசிக்கா ஹென்விக், ஜுலியா பட்டர்ஸ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். ஏற்கெனவே ' தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி பகிர்' எனும் வெளிநாட்டு படத்தில் தனுஷ் நடித்திருக்கிறார்...
THE GRAY MAN cast just got even better.
— NetflixFilm (@NetflixFilm) December 17, 2020
Jessica Henwick, Wagner Moura, Dhanush, and Julia Butters will join Ryan Gosling, Chris Evans, and Ana de Armas in the upcoming action thriller from directors Anthony and Joe Russo. pic.twitter.com/SJcz8erjGm