ரஜினி வீட்டில் லன்ச்!.. ஐஸ்வர்யாவுடன் மீண்டும் இணையும் தனுஷ்?!.. எல்லாம் கூடி வருதே!..

 
dhanush

ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷும் காதலித்து 2004ம் வருடம் திருமணம் செய்து கொண்டனர். இரண்டு மகன்கள் இருந்த நிலையில் கடந்து 2024ம் வருடம் அவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர். தங்களின் 20 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக அவர்கள் இருவருமே அப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

ஆனாலும், மகன்கள் இருவரும் அவ்வப்போது தனுஷிடமும், அவ்வப்போது அம்மா ஐஸ்வர்யாவிடம் இருந்து வருகிறார்கள். சில சமயம் ஐஸ்வர்யாவுடன் மகன்கள் இருக்கும்போது அந்த இடத்திற்கு தனுஷும் செல்லும் புகைப்படமும் வெளியானது. சமீப காலமாக ஐஸ்வர்யா தனது மகன்களுடன் செல்லும் எல்லா இடங்களிலும் தனுஷ் இருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில்  சென்னை ரோகிணி திரையரங்கில் ஜெயிலர் 2 படத்தின் முதல் காட்சியை பார்க்க ஐஸ்வர்யா தனது மகன்களுடன் வந்திருந்தபோது அங்கே தனுஷும் இருந்தார்..

ரஜினியை தவிர அவரின் குடும்பத்தில் எல்லோருமே அங்கே இருந்தனர். அது மட்டுமில்லாமல் ரஜினியின் குடும்பம் கலந்துகொள்ளும் பல நிகழ்ச்சிகளிலும் தனுஷும் கலந்து கொள்வதாக சொல்லப்படுகிறது. அதோடு, தனுஷ் அவ்வப்போது ரஜினியின் வீட்டுக்கு சென்று அவருடன் மதிய உணவு அருந்துவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா விரைவில் ஒன்றாக இணைவார்கள் என செய்திகள் பரவி வருகிறது.

வருகிற நவம்பர் 11ம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள அனிருத்தின் திருமணத்திற்கு தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் ரஜினியின் குடும்பத்தினருடன் இணைந்து சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

Tags

From Around the web