Categories: Cinema News latest news

நான் தூக்கி வளர்த்த புள்ள அனிருத்.. அப்படி செஞ்சிருக்க மாட்டார்.. தனுஷ் கூறிய நெகிழ்ச்சி சம்பவம்.!

இசையமைப்பாளர் அனிருத் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர இசை அமைப்பாளராக இருக்கிறார். கிட்டத்தட்ட பெரும்பாலான பெரிய நடிகர்களின் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் இவரது கண்ட்ரோலில் தான் இருக்கிறது என்றே கூறலாம். இவரது கால்ஷீட் கிடைக்கவில்லை என்றால் தான் மற்ற இசையமைப்பாளர்களை இயக்குனர்கள் தேடி செல்லும் நிலைம நிலவி வருகிறது.

இவரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியது என்றால் அது தனுஷ் தான். தனுஷின் 3 படத்தில் தான் இசையமைப்பாளராக அன்று அறிமுகமானார். அதன் பிறகு தனுஷின் நிறைய படங்களுக்கு இவர்தான் இசையமைப்பாளர்.  தனுஷின் நெருங்கிய உறவினர் தான் அனிருத்.

சில வருடங்களுக்கு முன்னர் நினைவிருக்கலாம், சிம்பு பாடிய பீப் பாடல் என்று ஒரு பாடல் வெளியானது. இந்த பாடலுக்கு இசையமைந்தது அனிருத் தான் என்று  தகவல் நிலவி வந்த சமயம், இவர்களை திட்டாத நபர் இல்லை என்று கூறலாம்.

இதையும் படியுங்களேன் –  விக்னேஷ் சிவன் நெஞ்சுக்குள் அடங்கிய நயன்தாரா.. தீயாய் பரவும் லேட்டஸ்ட் கிளிக்.. என்னை கூட்டிக்கொண்டு போ..

அப்படி இருந்த சமயத்தில், ஒரு மூத்த பத்திரிக்கையாளர், நடிகர் தனுஸிடம், சென்று, அனிருத் இப்படி செய்துவிட்டாரே? என்று கேட்டுள்ளார். நீங்கள் அதனை கண்டித்து வைத்திருக்கலாமே, என்று கேட்டுள்ளார். அதற்கு தனுஷ், ‘ நான் தூக்கி வளர்த்த பிள்ளை அனிருத். அவர் அப்படி செய்திருக்க வாய்ப்பே இல்லை.’ என்று கூறினாராம். அந்த அளவுக்கு அனிருத் மீது நம்பிக்கை வைத்திருந்தார் தனுஷ் என்று அந்த பத்திரிகையாளர் அண்மையில் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தார்.

Manikandan
Published by
Manikandan