அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பில் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மிஸ்ஸிங்!..

 
danush

இசையமைப்பாளர் அனிருத்தின் திருமணக் கொண்டாட்டங்கள் ஒருபுறம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், மற்றொருபுறம் நடிகர் தனுஷ் நிகழ்ச்சியில் பங்கேற்காதது பேசுபொருளாகியுள்ளது.

தனுஷ் மற்றும் அனிருத் இணைந்து 3 திரைப்படத்தில் பணியாற்றி ஒய் திஸ் கொலவெறி டி பாடல் மூலம் உலகளவில் பிரபலமானார். அதன்பிறகு வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன் போன்ற படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றினர். இடையில் சில ஆண்டுகள் இருவரும் இணைந்து பணியாற்றாமல் இருந்த நிலையில், திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் மீண்டும் இவர்கள் இணைந்தனர். 

அனிருத் காவ்யா மாறன் திருமணம் கிரீஸில் நடைபெற்றதைத் தொடர்ந்து சென்னையில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், விஜய், அஜித், கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தனுஷ் மட்டும் இடம்பெறாதது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.

இருவரும் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்த நிலையில் தற்போது தனுஷை அனிருத் தனது திருமணத்திற்கு அழைக்கவில்லையா, இல்லை தனுஷ் போக மருத்துவிட்டாரா என பல கேள்விகள் எழுந்துள்ளது. தனுஷ் மட்டுமின்றி அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பில் கலந்துக் கொள்ளவில்லை.

CR  Desk
CR Desk

7948 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web