தேசிய விருது: கேக் வெட்டி கொண்டாடிய ஓம் படக்குழு
72வது தேசிய விருது பட்டியல் நேற்று வெளியானது. அதில் இப்போது தனுஷுக்கு மீண்டும் தேசிய விருது கிடைத்துள்ளது. அதாவது, கேப்டன் மில்லர் படத்துக்காக சிறப்பு பிரிவிலும், சிறந்த தமிழ் படம் என்ற பிரிவில் ராயன் படத்துக்கும் இப்போது அவர் விருதுகளை பெறவிருக்கிறார். சிறந்த இயக்குனர் விருதை அமரன் பிளாக்பஸ்டர் படத்தினை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி பெற்றுள்ளார்.இவர்கள் இருவரும் தற்போது ஓம் படத்தில் பணியாற்றி வருகின்றன்ர். கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டி முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடித்து வருகிறார். ஓம் படம் தனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் தனுஷ் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் தேசிய விருது பட்டியலில் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சியில் தனுஷ், ராஜ்குமார் பெரிய சாமி இருவரும் ஓம் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். உடன் மம்முட்டியும் இதில் கலந்துகொண்டார்.
