dhanush
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏகப்பட்ட அதிசயங்கள் நடந்து வருகின்றது. அந்த வகையில் தற்போது ட்ரெண்டிங்கில் இருப்பது சிம்பு மற்றும் தனுஷ் தான். என்னப்பா நடக்குது இங்க இது திருமண விழாவா அல்லது ரியூனியன் பங்க்ஷனா என்று கேட்கும் அளவிற்கு தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணம் கலைகட்டி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். ஆனால் இவரை சுற்றி சமீப நாட்களாக ஏகப்பட்ட சர்ச்சைகள் உலா வருகின்றன. ஒரு செய்தி கிடைத்து விட்டாலே போதும் சினிமா விமர்சகர்கள் youtube நிகழ்ச்சிகளுக்கு பேட்டி கொடுக்கிறேன் என்கின்ற பெயரில் தாறுமாறான விமர்சனங்களை முன்வைத்து வருவார்கள்.
இதையும் படிங்க: அவன நடிக்க மட்டும் சொல்லுடா.. ஹீரோவின் ஆட்டிடியூடால் கடுப்படைந்த மணிரத்னம்
அதிலும் நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டதிலிருந்து தனுஷின் பெயர் டேமேஜாகி இருக்கின்றது. நடிகை நயன்தாரா தனது அறிக்கையில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இருந்து மூன்று வினாடி காட்சிகளை பயன்படுத்தியதற்கு தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்கின்றார் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதை பார்த்த பலரும் தனுஷ் இப்படிப்பட்டவர் அப்படிப்பட்டவர் என்று சமூக வலைதள பக்கங்களில் பேச தொடங்கி விட்டார்கள்.
அது மட்டுமா தமிழ் சினிமாவில் இருக்கும் பல நடிகர்களுடன் பிரச்சனை என்று தன் இஷ்டத்துக்கு கிளப்பி விடுகிறார்கள் சினிமா விமர்சகர்கள். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்திற்கு நடிகர் தனுஷ் எந்த ஒரு வாழ்த்து செய்தியையும் வெளியிடவில்லை. இதனால் இவர்கள் இருவருக்குள் சண்டை என்று கிளப்பி விட்டார்கள். நடிகர் சிம்புவுக்கும் நடிகர் தனுஷுக்கும் பல வருடங்களாக பிரச்சனை இருக்கின்றது என்பதுதான் பலரின் கண்ணோட்டம்.
dhanush
இப்படி அனைத்து விஷயங்களையும் தவிடு பொடி ஆக்கி இருக்கின்றார் நடிகர் தனுஷ். சமீபத்தில் dwan pictures நிறுவனத்தின் ஓனர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு தமிழ் சினிமாவை சேர்ந்த ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் தான் நடிகர் தனுஷ் தன்னுடைய இட்லி கடை திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.
இவரின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் வந்திருந்தார். அதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். அதில் நீலாம்பரி ரேஞ்சுக்கு நடிகை நயன்தாரா தனுசை கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்தது சமூக வலைதள பக்கங்களில் வைரலானது.
இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனுஷ் சிவகார்த்திகேயனை கட்டிப்பிடித்து நலம் விசாரித்து இருந்தார். இதிலிருந்து தனுசுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் தனுஷ் சிம்புவை கட்டிப்பிடித்து பேசி இருக்கின்றார்.
இதையும் படிங்க: யாரு சொன்னா? அடுத்த தல, தளபதி நாங்கதான்.. கட்டியணைத்து போஸ் கொடுக்கும் சிம்பு – தனுஷ்
இருவரும் சிரித்துப் பேசும் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. இதை பார்த்து சினிமா விமர்சகர்கள் இப்படி எங்களுக்கு கண்டன்ட் இல்லாமல் பண்ணிவிட்டீர்களே என்று புலம்பும் அளவிற்கு தனுஷ் தன் மீது இருந்த அனைத்து சர்ச்சைகளையும் நீக்கி வருகின்றார். இனி youtubeக்கு youtube அமர்ந்து எந்த விமர்சனங்களும் தனுஷ் குறித்து பேச முடியாத அளவுக்கு செய்து விட்டார். இனி புதிதாக எதையாவது அவர்களே கிரியேட் செய்து பேசினால் தான் உண்டு.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…