ஒரு கதைக்கு போட்டி போடும் தனுஷ் – சிவகார்த்திகேயன்!.. யாருக்கு லக்குன்னு பார்ப்போம்!…

0
96

ஒரு நல்ல கதை அதற்கு தேவையான விஷயங்களை அதுவே தேர்ந்தெடுக்கும் என சொல்வார்கள். முக்கியமாக ஹீரோவை. சில நடிகர்கள் நல்ல கதையில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். சில நடிகர்கள் தங்களின் கதாபாத்திரம் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். சில நடிகர்களோ இந்த கதை வெற்றி பெறுமா என்று மட்டும் யோசிப்பார்கள்.

சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்கள் கமர்ஷியல் மசாலா படங்களிலும் நடிப்பார்கள். நல்ல கதையம்சம் கொண்ட, நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களிலும் நடிப்பார்கள். இரண்டுக்குமே சில படங்களை உதாரணமாக சொல்ல முடியும். இன்னும் சொல்லப்போனால் நல்ல கதைகளில் நடிப்பதை ஒப்பிட்டால் சூர்யாவை விட தனுஷ் அதிக படங்களில் நடித்திருக்கிறார்

அதனால்தான் அவர் நடிப்புக்கு தேசிய விருதும் வாங்கினார். சூர்யா எந்த நடிகர்களுடன் ஒட்ட மாட்டார். திரையுலகில் அவருக்கு அதிக நட்பு வட்டாரமும் கிடையாது. சில நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களோடு மட்டுமே அவருக்கு பழக்கம் உண்டு. அப்படி சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த படம்தான் சூரரைப்போற்று.

இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார் சூர்யா. இந்த படத்திற்கு பின் மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானுறு என்கிற படத்தில் நடிக்கவிருந்தார் சூர்யா. இது 70 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்புடைய கதை.

இதில், சில காட்சிகளை சூர்யா மாற்ற சொல்ல சுதா கொங்கரா மறுக்க இப்படத்திலிருந்து வெளியேறினார் சூர்யா. அதன்பின் இந்த கதையில் நடிக்க தனுஷ் ஆர்வம் காட்டினார். அதேபோல், சிவகார்த்திகேயனுக்கும் இந்த கதையில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை. ஏனெனில், நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கும் மேலும் சுதாகொங்கரா படத்தில் நடித்தால் அவர் தனது இமேஜை மாற்றிவிடுவார் என நம்புகிறார்.

தனுஷ் ஒருபக்கம் தனது நெருங்கிய நட்பு வட்டாரங்களை அழைத்து புறநானூறு கதையை சொல்லி இதில் நான் நடித்தால் சரியாக இருக்குமா? ஏதேனும் பிரச்சனை வருமா? என ஆலோசித்து வருகிறாராம். ஒருவேளை அவர் நடிக்கவில்லை எனில் புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news