Categories: Cinema News latest news

இவங்களுக்கு இதே வேலையா போயிடிச்சு… முதலில் விஜய்.. இப்போ தனுஷ் சிக்கிட்டார்…

தமிழ் சினிமாவில் ஒரு பழக்கம் உண்டு. அது சினிமா தோன்றிய காலம் முதலே இருக்கிறது என்றே கூறலாம். அது என்னவென்றால், ஒரு திரைப்படம் ஹிட் ஆகிவிட்டால், மீண்டும் அதே இயக்குனர் இயக்கத்தில் நாயகன் நடிக்க ஆர்வம் காட்டுவார்.

அந்த நிலை எப்போது மாறும் என்றால் அப்படி மீண்டும் அதே கூட்டணி  இணைந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி தோல்வியடைந்தால் மட்டுமே இந்த கூட்டணி முறியும்.

இதையும் படியுங்களேன் – அதுல ஒண்ணுமில்ல தூக்கி போட்ரு…. ரசிகர்களை கடுப்பேற்றிய ஜெயம் ரவியின் புதிய வீடியோ..

அப்படி தான் தளபதி விஜய் – இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி , கத்தி என பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த கூட்டணியை மீண்டும் சன் பிக்ச்சர்ஸ் சர்கார் படத்திற்காக இணைத்தது. ஆனால் முந்தைய படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை அந்த திரைப்படம் ஏற்படுத்த தவறியது என்பதே உண்மை மீண்டும் அந்த கூட்டணி இன்னும் இணையவில்லை.

இதையும் படியுங்களேன் – பல லட்சம்…பல கோடி…சினிமாவுல கூட இவ்வளவு சம்மாதிக்க மாட்டாங்க போல!..

அதே போல, தற்போது தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் எதிர்பார்த்ததை விட மிக பெரிய வெற்றி அடைந்துள்ளது. அதன் காரணமாக பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ், மீண்டும் மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க ஒரு படம் தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளதாம். தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படங்கள் முடிந்த பிறகு இந்த பட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.

ஹிட் கொடுத்த கூட்டணி இணைந்தால்,  அது வெற்றி பெறுமா என்பது சந்தேகமே, அதுவே, அந்த கதைக்கான ஹீரோ அமைந்தால், அதனை சரியாக அந்த இயக்குனர் சரியாக படமாக்கினால் படம் நிச்சயம் வெற்றி பெரும்.

Manikandan
Published by
Manikandan