×

விஜய் சேதுபதியும், தனுஷும் படித்தது ஒரே பள்ளியில் தான் தெரியுமா? செம சேதி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
 
விஜய் சேதுபதியும், தனுஷும் படித்தது ஒரே பள்ளியில் தான் தெரியுமா? செம சேதி!

கோலிவுட்டின் ஹிட் நாயகர்கள் விஜய் சேதுபதியும், தனுஷும். தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வருகிறார்கள். 67வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோலிவுட்டிற்கு மொத்தம் 7 விருதுகளை வென்றுள்ளது. 'அசுரன்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது தனுஷிற்கும், சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், விஜய் சேதுபதியும், தனுஷும் ஒரே பள்ளியில் படித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தாய் சத்யா எம்ஜிஆர் பள்ளியில் படித்திருக்கிறார்கள். அந்த பள்ளியின் தாளாளரும், நடிகருமான தீபன் இதுகுறித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், எங்கள் பள்ளியின் மாணவர்களான விஜய் சேதுபதியும், தனுஷும் ஒரே வருடத்தில் தேசிய விருதை வென்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பள்ளி எம்ஜிஆர்ரால் துவங்கப்பட்டது எனத் தெரிவித்து இருக்கிறார்.  

From around the web

Trending Videos

Tamilnadu News