Connect with us
dhanush

Cinema News

காக்க வைத்த தனுஷ்.. சிம்பு பக்கம் போன வெற்றிமாறன்.. கடுப்பாகி சுள்ளான் செய்த வேலை!..

இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவின் உதவியாளர் வெற்றி மாறன். பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக மாறினார். இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே தனுஷ் ஹீரோ என்பதால் இருவருக்கும் நல்ல நட்புறவு ஏற்பட்டது.

அதன்பின் தனுஷை வைத்தே வெற்றிமாறன் படங்களை இயக்கினார். வெற்றிமாறனும் திறமையான இயக்குனர் என்பதால் தனுஷும் அவரை பயன்படுத்திக்கொண்டார். தனுஷை வைத்து ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய படங்களை வெற்றிமாறன் இயக்கினார். இதில், ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய படங்களுக்கு தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

இதையும் படிங்க: சிரிப்பே வரல சந்தானம்.. சாவு வீட்ல டாவு கேட்குதா?.. 80ஸ் பில்டப் விமர்சனம் இதோ!..

தனுஷ் இல்லாமல் வெற்றி மாறன் எடுத்தது விசாரணை மற்றும் விடுதலை என இரண்டு படங்கள் மட்டுமே. பொதுவாக சினிமாவில் இரண்டு நடிகர்களுக்கு இடையே பெரிய போட்டி இருக்கும். எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், அஜித் – விஜய் என இந்த பட்டியல் நீள்கிறது.

இதில் தனுஷ் – சிம்புவையும் சேர்த்துக்கொள்ளலாம். சிம்பு தனது நடவடிக்கையால் சினிமாவில் ஓரங்கட்டப்பட்ட போது தனுஷ் பெரிய நடிகராக வளர்ந்திருந்தார். எனவே, மறைமுகமாக இருவருக்கும் இடையே பனிப்போர் துவங்கியது. அது பல வருடங்களாக இருந்து வருகிறார். அதேநேரம், தனுஷ் போல சிம்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில்லை.

இதையும் படிங்க: திரிஷா அப்பவே இத பண்ணியிருந்தா பிரச்சனையே இல்ல!.. கேப்பில் கெடா வெட்டும் பயில்வான்!..

வட சென்னை படம் உருவான போது வெற்றிமாறனை பல மாதங்கள் காத்திருக்க வைத்தார் தனுஷ், காத்திருந்து காத்திருந்து வெறுத்துப்போன வெற்றிமாறன் அந்த கதையை சிம்புவிடம் சொல்ல அவரும் நடிக்க சம்மதித்துவிட்டார். இந்த தகவல் தனுஷுக்கு போக வெற்றிமாறனிடம் பயங்கரமாக சண்டை போட்டுள்ளார்.

அதன்பின் கால்ஷீட் கொடுத்து அவரே அந்த படத்தில் நடித்தார். வெளியே சிரித்து பேசிக்கொள்ளும் நடிகர்களின் மனதிற்குள் எவ்வளவு வன்மமும், பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி..

இதையும் படிங்க: 2 ஆயிரம் கோடி போச்சி!.. சிவகார்த்திகேயனால் நடு ஆற்றில் விடப்பட்ட கமல்.. முக்கிய டீல் புட்டுகிச்சே…

Continue Reading

More in Cinema News

To Top