danush
தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலங்களின் கனவாக இருப்பது போயஸ் கார்டனில் எப்படியாவது ஒரு வீட்டை வாங்கிவிட வேண்டும் என்பது தான். அப்படி என்ன இருக்கிறது என்று ஆராய வேண்டிய அவசியமில்லை. ஜெயலலிதா, ரஜினி போன்ற பெரிய பெரிய விஐபிக்கள் உள்ள இடம் அது. சமீபத்தில் தனுஷும் அங்கு ஒரு வீட்டை கட்டி தன் பெற்றோரை குடியமர்த்தியிருக்கிறார்.
dhanush1
தனது பெற்றோருக்காகவே அந்த வீட்டை பார்த்து பார்த்து தனுஷ் கட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இரண்டு வருடங்களாக கிட்டத்தட்ட 150 கோடி மதிப்பில் சொகுசு பங்களாவாக காட்சியளிக்கிறதாம் தனுஷின் போயஸ் கார்டன் வீடு. ஆசைக்காக கட்டியிருக்கிறார் என்ற தகவல் ஒரு பக்கம் பரவினாலும் அதற்கு பின்னனியில் ஒரு காரணம் இருப்பதாகவே தெரிகிறது.
அதாவது ஒரு சம்பந்தி என்ற முறையில் ரஜினி தரப்பு தன் பெற்றோரை சரியாக நடத்தவில்லை என தனுஷ் கருதுகிறார். இதற்கு பின்னணியில் சில காரணங்களும் இருக்கிறது. ஒரு சமயம் கஸ்தூரி ராஜா ஒரு பணப் பிரச்சினையில் சிக்க அவர் மேல் வழக்கு தொடர்ந்த சம்பந்தப்பட்டோர், இந்த பணத்தை கஸ்தூரி ராஜா கொடுக்கவில்லை எனில் ரஜினி படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என வழக்கு தொடர்ந்தனர். இது ரஜினிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. சம்பந்தி என்பதற்காக அதற்கெல்லாம் நான் சம்பந்தமாக முடியாது என அவர் வெடித்துள்ளார்.
rajini
எனவே, எப்படியாவது தன் அப்பா, அம்மாவை தலை நிமிர வைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஒரு குறிக்கோளுடன் தான் தனுஷ் இந்த வீட்டை கட்டியிருக்கிறார், அதுவும் ரஜினி இருக்கும் போயஸ் கார்டன் வீட்டின் அருகிலேயே, ரஜினி வீட்டை போலவே 4 கிரவுண்டில் இந்த வீட்டை பல்வேறு வசதிகளுடன் கெத்தாக பிரம்மாண்டமாக கட்டியிருக்கிறார் என விபரம் அறிந்த சினிமா பிரபலங்கள் கூறுகின்றனர். இந்த வீட்டில் சமீபத்தில் பெற்றோருடன் தனுஷ் குடியேறினார். அது தொடர்பான புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இதையும் படிங்க: இளையராஜாவை ஒருமையில் திட்டிய நபர்… கொந்தளித்த உதவியாளர்… இசைஞானி என்ன பண்ணார் தெரியுமா?
அந்தப் புகைப்படத்தில் கஸ்தூரி ராஜா, அவரது மனைவி, உடன் தனுஷ் நீண்ட முடியுடன் தாடியுமாக பக்கத்தில் இருக்கிற மாதிரியான புகைப்படங்கள் வைரலானது. இந்த வீடு முழுக்க முழுக்க தன் தாய் தந்தைக்காகவும் தன் மகன்களுக்காகவும் மட்டுமே கட்டியிருக்கிறார் தனுஷ் என கூறப்படுகிறது.
dhanush3
TVK Vijay:…
Vijay: தமிழ்…
Idli kadai:…
Vijay: கரூரில்…
Kantara 2…