dhanush
Actor Dhanush: இன்று கோலிவுட்டின் கலக்கல் மன்னனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இன்று அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் எல்லாமே மிகவும் சவாலான கதாபாத்திரங்கள்தான். ஆனால் இந்தளவு உச்சத்தை தனுஷ் அடைவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை என மூன்றும் சேர்ந்த கலவையாகவே காணப்படுகிறார் தனுஷ்.
சமீபகாலமாக தனுஷின் படங்கள் இந்த சமூகத்திற்கு ஏதாவது ஒரு கருத்தை சொல்வதாகவே அமைகின்றன. அதனால் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் தனுஷ் ஒரு மிகப்பெரிய உயரத்தில்தான் இருக்கிறார். அவருக்கு என தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் தன் சாதனையை தொடர்ந்து வருகிறார் தனுஷ்.
dhanush
ஹாலிவுட்டிலும் அண்ணன் யார் என்பதை நிருபித்துவிட்டார். இந்த நிலையில் தனுஷ் தன்னுடைய 50வது படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இளையராஜாவின் பயோபிக்கிலும் தனுஷ் நடிக்க இருக்கிறார். அந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் தான் இயக்க இருக்கிறார் என்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சத்தமே இல்லாமல் தனுஷின் 51 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்க படம் ஒரு பேன் இந்தியா படமாகவே தயாராக இருக்கிறது. இந்தப் படத்திலும் வழக்கம் போல தனுஷ் வித்தியாசமான கெட்டப்பில்தான் நடிக்க இருக்கிறார். ஒரு பக்கம் பிதாமகன் சேது கெட்டப் போலவே தோன்றுகிறது.இந்தப் படத்திற்கு குபேரா என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Pradeep Ranganathan:…
Hariskalyan: இந்த…
STR49: முன்னணி…
Biggboss: விஜய்…
விஜயை உருவாக்கிய…