அமரன் மாதிரி வெற்றி கிடைக்குமா?.. தனுஷின் 55வது டைட்டில் அறிவிப்பு விழா அப்டேட் இதோ!..

 
d55

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அவரது 55வது திரைப்படமான D55 குறித்த முக்கிய அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தை தயாரித்து வரும் வண்டர்பார் ஃபில்ம் நிறுவனம், இன்று மாலை 6.30 மணிக்கு இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என அறிவித்துள்ளது.

 சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் என்பதால் D55 மீது கூடுதல் கவனம் திரும்பியுள்ளது. இந்த திரைப்படம் ஒரு பிரம்மாண்டமான ஆக்சன்  திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும், நடிகர் தனுஷுடன் இணைந்து மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர்களுடன் சாஇ பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாஇ அபயங்கர் இசையமைத்து வருகிறார். சமீப காலங்களில் தனது பாடல்கள் மற்றும் இசை ஆல்பங்கள் மூலம் கவனம் ஈர்த்துள்ள அவர், தனுஷ் படத்தின் மூலம் இன்னொரு முக்கியமான மைல்கல்லை எட்டவுள்ளார்.

தற்போது D55 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது வண்டர்பார் ஃபில்ம் நிறுவனம் "புயலைக் காணத் தயாராகுங்கள்" என்ற வாசகத்துடன் புதிய போஸ்டரை வெளியிட்டு, படத்தின் 'First Strike' இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது.

மேலும், இன்று மாலை வெளியாகவுள்ள 'First Strike' வீடியோவில் படத்தின் தலைப்பு, கதாபாத்திரங்களின் தோற்றம் அல்லது கதைக்களம் தொடர்பான முக்கிய தகவல்கள் இடம்பெறுமா? என்ற ஆவலில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். "புயலைக் காணத் தயாராகுங்கள்" என்ற அறிவிப்பே தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

From Around the web