தனுஷை வைத்து புஷ்பா படமா?.. 55வது படத்துக்கு இப்படியொரு டைட்டிலா?.. ரசிகர்கள் அப்செட்!..

 
om

அமரன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடித்து வரும் படம் உருவாகி வருகிறது. அந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு மினி டீசருடன் தற்போது வெளியானது.

மரத்தை வெட்டச் சென்றவர்களை வனக் காவலர்கள் பிடித்து சுடப்போவது போன்ற காட்சியில் அங்கே புஷ்பா ஸ்டைலில் கோடாரியை தூக்கி வீசி என்ட்ரி கொடுக்கும் தனுஷ் துப்பாக்கி வைத்துள்ள அனைத்து போலீஸ்காரர்களையும் பந்தாடி அந்த மக்களை காப்பாற்றுகிறார்.

om

கோடரி வந்த உடனே அண்ணாமலையார் என மக்கள் கோஷம் போட படத்துக்கு ‘ஓம்’ என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்துக்கு அவுரா என்றும் செழியன் என்றும் தலைப்பு வைக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஓம் நமச்சிவாயா என தனுஷ் எப்போதும் சொல்வாரே அதிலிருந்து ஓம் டைட்டிலை எடுத்து ராஜ்குமார் பெரியசாமி வைத்துள்ளார் என்கின்றனர்.


ஏற்கனவே ஓம் டைட்டிலில் பல படங்கள் உள்ள நிலையில், ரசிகர்களை இந்த ஃபர்ஸ்ட் ஸ்டிரைக் மற்றும் டைட்டில் பெரிதாக கவரவில்லை. ஆனாலும், தனுஷை விட ராஜ்குமார் பெரியசாமி மீது இன்னமும் ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ரங்கூன் படம் போல ஆகாமல் இருந்தால் சரி தான் என்கின்றனர்.

Tags

From Around the web