அடுத்தடுத்து ஏமாற்றம்!.. அடுத்து கோயில் பூசாரியாக மாறும் தனுஷ்!..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு எனப் பல துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்
 
dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு எனப் பல துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை.  நேற்று வெளியான ஓம் படம் கூட அவரது ரசிகர்கள் ஒரு  தரப்பினரை கவரவில்லை.  நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் தனுஷின் முந்தைய படங்களை ஒப்பிடுகையில் இப்படம் முறியடித்துள்ளது.  முஇதனால், அடுத்தடுத்து நடிக்கவுள்ள படங்களை தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், தனுஷின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் அனவருடைய கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் தற்போது தனது 56வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக  D56  என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

dhanush

கிராமத்துப் பின்னணியில் அதிரடி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இது உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இப்படத்தில் தனுஷ் கோயில் பூசாரியாக நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள தனுஷ், இந்தப் படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் தோன்றுவார் என்ற ஆர்வமும் எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தனுஷுடன் பணியாற்றிய மாரி செல்வராஜ் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் மீண்டும் அவருடன் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் கதையில் உருவாகும் திரைப்படத்திலும் தனுஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அந்தப் படத்தை பன்சாலி இயக்கப்போவதில்லை என்றும், வேறொரு இயக்குநர் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எப்படியோ ஒரு அதிரி புதிரி வெற்றிக்கு தயாராகி வருகிறார் தனுஷ் என்பது மட்டும் உண்மை.

Sai Vikas
Sai Vikas

129 Articles

Sai vikas is an experienced digital journalist with 16years of expertise in online news reporting. He specializes in covering cinema and sports

From Around the web