ரஜினியோடு மோதுகிறாரா தனுஷ்?.. SK-வை பொளந்ததெல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகும்ல!..
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர் 2. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. முதல் பாகத்தை போலவே இந்த படத்திலும் சிவ்ராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
அதோடு பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் ஒரு சிறப்பு கேமியோ வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் ரஜினி தற்போது தர்மன் படத்தில் நடிக்க துவங்கிவிட்டார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். சமீபத்தில்தான் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் துவங்கியது..
ஒருபக்கம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ஓம் திரைப்படம் வருகிற அக்டோபர் 16ம் தேதி ரிலீஸ் என ஏற்கனவே அறிவித்திருக்கிறார்கள். ஏனெனில், அப்போது ஆயுத பூஜை வருவதால் தொடர் விடுமுறையால் வசூலை அள்ளிவிடலாம் என்பதுதான் கணக்கு.
ஆனால், ரஜினியின் ஜெயிலர் 2 படத்தையும் அக்டோபர் 16ம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள் என்கிற செய்தி தனுஷுக்கு கிடைத்திருக்கிறது. ரஜினி படத்தோட மோதினால் கண்டிப்பாக நம்மை ரஜினி ரசிகர்கள் திட்டுவார்கள், வேண்டுமென்றே ரஜினி படத்தோடு தனுஷ் மோதுகிறார் என கிளப்பி விடுவார்கள் என யோசித்த தனுஷ் ஓம் படத்தின் தயாரிப்பாளரை கூப்பிட்டு நமது படத்தை நவம்பர் 6ம் தேதி படத்தை வெளியிடலாம் என சொல்லிவிட்டாராம். ஏனெனில், நவம்பர் 8ம் தேதி தீபாவளி வருகிறது.
விஜயின் ஜனநாயகன் படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட அதே தேதியில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டபோது விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை போட்டு பொளந்தார்கள். இதெல்லாம் தெரிந்துதான் தனுஷ் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என சொல்லப்படுகிறது..
