dhanush
தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான நடிகராக வலம் வருகின்றார் நடிகர் தனுஷ். ஒரு பக்கம் மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களில் விறுவிறுப்பாக நடித்து வந்தாலும், மற்றொரு பக்கம் தனது இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகின்றார். கடைசியாக தனது 50 ஆவது படமான ராயன் திரைப்படத்தை மிகச் சிறப்பாக இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரித்திருந்தது.
இதையும் படிங்க: பாலிவுட்டிலே டேரா போட்ட அட்லீ!.. அடுத்த படம் இந்த கான் நடிகருடனா?!.. அதிர்ஷ்டக்காத்து பிச்சிக்கிட்டு அடிக்குதே!…
இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் இளைஞர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது அக்கா மகன் பவிஷ் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கின்றார்.
அதை தொடர்ந்து அனிகா சுரேந்திரன் பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடெக்ட்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
dhanush neek
ஆனால் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியாகவில்லை. தனுஷ் இயக்கி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார். இப்படத்தின் முதல் சிங்கிள் ‘கோல்டன் ஸ்பேரோ’ வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. youtube-ல் ட்ரெண்டிங்கில் இருக்கின்றது. இந்த பாடலுக்கு நடிகை பிரியங்கா மோகன் நடனமாடியிருந்தார்.
கலர்ஃபுல்லாக இருந்த இந்த பாடல் பட்டித்தொட்டி எல்லாம் பிரபலமாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து இரண்டாவது சிங்கிள் லவ் பெயிலியர் பாடல் வரும் 25ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றதாம். இந்தப் பாட்டிற்கு சூப் சாங் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.ஏற்கனவே தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலுக்கு சூப் சாங் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ரஹ்மான் கிடைச்சது பெரிய பாக்கியம்.. சாயிராவுக்கு அன்பான வேண்டுகோள் வைத்த இயக்குனர்
இப்பாடல் தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பேமஸானது. அதேபோல இந்த படத்திலும் லவ் பெயிலியர் பாடலாக உருவாகி இருக்கும் இந்த பாடலுக்கு சூப் சாங் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. வரும் 25ஆம் தேதி இப்பாடல் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. முதல் பாடலே மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இன்னும் 3 தினங்களில் வெளியாக உள்ள இரண்டாவது பாடல் இதே போல மிகச் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. நடிகர் தனுஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டருடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…