அந்த மனசு தான் கடவுள்.. இயக்குநர் மனைவியை கண்கலங்க வைத்த தனுஷ்
தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் கர. போர் தொழில் வெற்றி படத்தை இயக்கிய விக்னேஷ் ரஜா இயக்கியுள்ள இந்த படத்தில் மமிதா பைஜூ, ஜெயராம், கே.ஸ்.ரவிகுமார், கருணாஸ் என பல நடிகர்கள் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் விழா சமீபத்தில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் விக்னேஷ் ராஜாவின் மனைவியும் கலந்துகொண்டார். அப்போது, தனது கணவர் இயக்கும் புதிய படம் வெற்றி பெற வேண்டும் என வேண்டி, கரசாமி என்ற பெயரை 1001 முறை அவர் எழுதிய தகவல் மேடையில் பகிரப்பட்டது. இதைக்கேட்டு அரங்கமே நெகிழ்ந்த நிலையில், மைக்கைப் பிடித்த இயக்குநர் விக்னேஷ் ராஜா, குறுக்கிட்டு ஒரு சிறிய திருத்தத்தைச் செய்தார். என் மனைவி கரசாமி என்று எழுதியுள்ளார். ஆனால், படத்தின் உண்மையான பெயர் கர என்று அவர் சிரித்தபடி கூறினார்.
உடனே தனுஷ் இது குறித்து மேடையில் பேசியபோது, அவங்க எழுதுனது வெறும் பேனா, பேப்பர்ல தான். ஆனால் தன் கணவன் எப்படியாவது ஜெயிக்கணும், அவர் படம் பெரிய வெற்றி அடையணும்னு நினைச்சு உருகி உருகி எழுதுனாங்க பாத்தீங்களா.. அந்த மனசுதானே கடவுள். எண்ணம் போல் வாழ்க்கை சிஸ்டர் என்று தனுஷ் பேசினார்.
தனுஷ் கூறியதை கேட்டதும் விக்னேஷ் ராஜா மனைவி கண் கலங்கிவிட்டார். இந்த சம்பவம் விழாவில் வந்திருந்த அனைவரையும் நெகிழ வைத்துவிட்டது.
