
Cinema News
Idli kadai: இட்லி கடை மாதம்பட்டி ரங்கராஜ் கதையா?!.. தனுஷ் கொடுத்த விளக்கம்!…
Dhanush: நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ். பார்த்திபன். நித்யாமேனன். அருண் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி ரிலீசாக உள்ளது. எனவே படக்குழு புரமோஷன் வேலைகளை துவங்கியிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்புதான் இப்படத்தின் ஆடியோ லான்ச் நடந்தது. அந்த விழாவில் பேசிய தனுஷ் ‘எனக்கு சிறுவயதில் இட்லி சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் கையில் பணம் இருக்காது. எனவே நானும் என் சகோதரிகளும் வயலில் பூ பறிக்கப் போவோம். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து எங்கள் கிராமத்தில் இருந்த இட்லி கடையில் சாப்பிடுவோம் என்றெல்லாம் பீலிங்காக பேசியிருந்தார்.
இதை பலரும் ட்ரோல் செய்தார்கள். இல்லாத கதையை தனுஷ் சொல்கிறார் என்றெல்லாம் சொன்னார்கள். இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் விழா நேற்று மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடந்தது. அந்த விழாவில் ‘இதுபற்றி ஏன் பேசினீர்கள்?’ என கேட்டதற்கு ‘உண்மையிலே சிறுவயதில் நாங்கள் வறுமையில்தான் வாடினோம். உண்மையில் வயலில் பூப்பறித்து அதில் வைத்த காசை வைத்துதான் நாங்கள் இட்லி சாப்பிட்டோம். அதைத்தான் நான் சொன்னேன்’ என விளக்கமளித்திருந்தார்.
ஒரு பக்கம் இந்த படத்தில் டிரெய்லரை பார்த்தபோது தனுஷ் சமையல் கலைஞராக வருகிறார். படம் முழுக்க கதை அதை சுற்றிய பின்னப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜின் கதையைத்தான் தனுஷ் படமாக எடுக்கிறார் என சிலர் கிளப்பி விட்டார்கள்.
நேற்று மதுரையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பரிதாபங்கள் கோபி இந்த கேள்வியை தனுஷிடம் முன் வைத்தார் அதற்கு பதில் சொன்ன தனுஷ் ‘அதெல்லாம் எதுவும் இல்லை. அந்த செய்தியில் உண்மை இல்லை. இந்த படம் முழுக்க முழுக்க என் கற்பனை. என் கிராமத்தில் நான் பார்த்த சில கதாபாத்திரங்களை மையப்படுத்தி இந்த கதையை எழுதி இருக்கிறேன்’ என விளக்கம் அளித்து இருக்கிறார்.