Categories: Cinema News latest news throwback stories

பில்கேட்ஸை ஃ பாலோ செய்கிறாரா தனுஷ்.! விவாகரத்து பின்னணியில் பகீர் பின்னணி.!

கடந்த திங்கள் கிழமை இரவு வந்த ஒரு செய்தி 4 நாட்களுக்கு மேலாகியும் அதன் வீரியம் குறையாமல் பரவி வருகிறது என்றால் அது தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு தான். தனுஷ் முன்னணி நடிகர். ஐஸ்வர்யா , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் இது போதாதா இந்த நெட்டிசன்களுக்கு வச்சி செஞ்சிட்டு இருக்காங்க.

இவர்கள் இருவரது பிரிவுக்கு இதுதான் உண்மையான காரணம். இவர்கள் தான் தனுஷின் விவாகரத்துக்கு காரணம். இந்த நடிகை உடன் தொடர்பு, வீட்டில் சண்டை, கடந்த சில வருடங்களாகவே தனியாக இருக்கின்றனர். ரஜினிகாந்த் பஞ்சாயத்து செய்தார் ஆனால் பிரச்சனை தீரவில்லை.

இப்படி அவர்கள் இஷ்டத்திற்கு அள்ளி விட்டு கொண்டு இருக்கின்றனர். தற்போது இது போதாது என புது புரளியை கிளப்பி விட்டுள்ளனர். தனுஷ், உலக பணக்காரனாரான பில்கேட்ஸை பாலோ செய்கிறார் என கூறி வருகின்றார்.

அதாவது பில்கேட்ஸ் தனது வரி சுமையை குறைக்க அவரது மனைவியை பிரிந்தாராம். அதே போல தனுஷ் தற்போது அதிக படங்களில் மொழிகள் கடந்து நடித்து வருகிறார். அதிக சம்பாத்தியத்தில் தான் போயஸ் கார்டனில் ஒரு பிரமாண்ட வீடு கட்டி வருகிறார். அதன் மதிப்பு 150 கோடி வரை அதனால் வரி சுமையை குறைக்க மனைவியை விவாகரத்து செய்துள்ளார் தனுஷ் என புது புரளியை கிளப்பிவிட்டுள்ளனர்.

எது எப்படியோ தனுஷ் -ஐஸ்வர்யா அவர்களின் மண வாழ்கை பிரிவு அவர்களது சொந்த விருப்பம். அதனை பொதுவெளியில் விவாதிப்பது ஆரோக்கியமான சூழல் இல்லை.

Manikandan
Published by
Manikandan