Categories: Cinema News latest news

இந்த வயசுல லவ் , டூயட் எல்லாம் தேவையா? மறைமுகமாக ரஜினியை தாக்கிய தனுஷ்?

தனுஷ் – யாரும் எதிர்பார்க்காத ஒரு வளர்ச்சி. இவரெல்லாம் எங்க சினிமாவில் சாதிக்க போகிறார் என்று ஆரம்பத்தில் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானவர். இதெல்லாம் ஒரு மூஞ்சியா? என்றும் வாய்க்கு வந்தப் படி பேசிக் கொண்டிருக்க எல்லாவற்றையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் யார் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும் என தன் நினைத்திருந்த இலக்கை நோக்கி பயணப்பட்டார்.

dhanush1

ஏராளமான வெற்றி தோல்விகளை  கடந்து இன்று ஒரு நடிகராக, தயாரிப்பாளராக, பாடகராக, பாடலாசிரியராக என பன்முகத்திறமைகள் வாய்க்கபெற்றவராக வளர்ந்து நிற்கிறார் தனுஷ். யாரும் எதையும் ஈஸியாக எடுத்துக் கொள்ள முடியாதுதான். ஆனால் அதையே ஒரு உத்வேகமாக எடுத்துக் கொண்டால் விரைவில் லட்சியத்தை அடைய முடியும். அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக இருப்பவர் நடிகர் தனுஷ்.

இதையும் படிங்க : பெண்கள், ஆண்களை ஏமாற்றிய ப்ளேபாய் – விக்ரமன் பற்றி பத்திரிக்கையாளர் ஆவேசப்பேட்டி

இன்று உலக சினிமாவில் ஒரு முக்கிய நடிகராகவும் திகழ்ந்திருக்கிறார். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எல்லா பக்கமும் சுற்றிக் கொண்டு வரும் ஒரு உன்னத கலைஞனாக வலம் வரும் தனுஷ் தன்னுடைய 50 வது படத்தை நெருங்கியிருக்கிறார். அந்தப் படத்தை அவரே இயக்கி  நடிக்கவும் செய்கிறார்.

dhanush2

இந்த நிலையில் அவரின்  நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் மரியான். இந்தப் படத்தை பரத்பாலா இயக்க வேணு ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். தனுஷுக்கு ஜோடியாக பார்வதி  மேனன் நடித்திருந்தார். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் செம ஹிட்.

நேற்று மரியான் படக்குழு படத்தின் 10 வது ஆண்டை கொண்டாடினார்கள். அப்போது ஒரு வீடியோ காலில் ரகுமான், தனுஷ், தயாரிப்பாளர் வேணு ரவிச்சந்திரன் இணைந்து கான்ஃபரன்ஸில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வேணு ரவிச்சந்திரன் தனுஷிடம் ‘மீண்டும் எப்போது மரியான் படம் மாதிரியான ஒரு காதல் சப்ஜெக்ட்டில் நடிப்பீர்கள்? என்ன ஒரு ரொமாண்டிக்? மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறேன்’ என்று கேட்டார்.

dhanush3

அதற்கு தனுஷ் ‘என்ன சார் வயசு 40 ஆச்சு. இன்னும் எப்படி அதே மாதிரி ரொமாண்டிக்? அதெல்லாம் செட் ஆகாது. அதற்கு பதிலாகத்தான் அம்மா லவ், சிஸ்டர் லவ்னு படம் பண்ணிட்டு இருக்கேன்’ என்று சொன்னார். இந்த வீடியோவை பார்த்த ரஜினி ரசிகர்கள் இதென்னப்பா மறைமுகமாக ரஜினியை தாக்குகிறாரோ என பேசிவருகிறார்கள்.

இதையும் படிங்க : ரியல் ப்ளே பாயாக இருந்த டாப் 5 நடிகர்கள் – அப்பவே ஆட்டம் போட்ட ஜெமினிகணேசன்

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini