×

லைக்காவிற்கு எதிராக நீதிமன்றம் செல்லும் தனுஷ்: அதிர்ச்சி தகவல் 

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து சர்ச்சைக்குரிய பல நிகழ்வுகளை சந்தித்த நிலையில் தற்போது இந்நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ’மாஃபியா’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது
 

. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முற்றிலும் முடிவடைந்து தற்போது சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சென்சார் சான்றிதழ் கிடைத்தவுடன் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது 

இந்த நிலையில் இந்த படத்தை எதிர்த்து நடிகர் தனுஷ் நீதிமன்றம் செல்ல இருப்பதாக ஒரு செய்தி கோலிவுட்டில் பரவி வருகிறது. தனுஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ’காலா’ திரைப்படத்தின் விநியோக உரிமையை லைக்கா நிறுவனம்தான் பெற்றது. ஆனால் இந்நிறுவனம் இந்த படம் தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறி தனுசுக்கு தரவேண்டிய 30 கோடி ரூபாயை நிறுத்தி விட்டதாம். இதனை தனுஷ் ஏற்றுக்கொண்டாலும் அதற்குரிய கணக்குகளை ஒப்படைக்க வேண்டும் என்று தனுஷ் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் இரண்டு வருடங்களாகியும் இன்னும் காலா படத்தின் வரவுசெலவு கணக்கை லைகா நிறுவனம் தரவில்லை என்றும் கூறப்படுகிறது 

இதனை அடுத்து ’மாஃபியா’ படத்தை தடை செய்ய வேண்டும் என தனுஷ் நீதிமன்றம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ படத்தின் போதே நீதிமன்றம் சென்றால் மாமனாருக்கு எதிராக மருமகனே நீதிமன்றம் செல்வதாக ஒரு குற்றச்சாட்டு எழும் என்பதால் தர்பார் ரிலீஸின்போது நீதிமன்றத்திற்கு அவர் செல்லவில்லை என்றும் தற்போது ’மாஃபியா’ படத்திற்கு எதிராக அவர்கள் நீதிமன்றம் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது 

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடித்த ’மாஃபியா’ திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும்போது தனுஷால் இந்த படம் ரிலீஸ் ஆகுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது

From around the web

Trending Videos

Tamilnadu News