Connect with us

Cinema News

படத்தில அவருக்கே கிசுகிசு போட்ருக்கேன்… ஓபனாக சொன்ன தனுஷ்… வன்மத்த தீத்துக்கிட்டாரோ…

Dhanush: கோலிவுட்டில் ஏற்கனவே தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே இருக்கும் பிரச்சினை அனைவரும் அறிந்தது தான். ஆனால் இதை தன்னுடைய படத்தில் கிசுகிசுவாகவே தனுஷ் போட்டு இருப்பதாக கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சர்ச்சைக்கு பெயர் போன நடிகர் என்றால் அதில் முக்கிய இடத்தில் இருப்பவர் நடிகர் தனுஷ்தான். ஏகப்பட்ட சர்ச்சைகள் சமீப காலமாக திரையுலகில் நடைபெற்ற விவாகரத்திற்கு காரணமாக கூட அவர் பெயர் அடிபட்டது. அது மட்டுமல்லாமல் பாடகி சுசீத்ரா தனுஷின் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.

இதையும் படிங்க: அஜித் மேல் இப்போ வரைக்கும் கோபம் இருக்கு! என்ன லைலா இப்படி சொல்லிட்டாங்க?

இதைத்தொடர்ந்து நடிகை சிவகார்த்திகேயன் சமீபத்தில் கலந்து கொண்ட திரைப்பட விழா ஒன்றில் நான் பிறரை தூக்கிவிட்ட விஷயத்தை வெளியில் சொல்லிக் கொள்ள மாட்டேன். என்னை அப்படி சொல்லியே பழகிவிட்டனர் எனவும் பேசி இருப்பார். இதனால் கடுப்பான தனுஷ் ரசிகர்கள் இருவரின் பழைய வீடியோக்களை எடுத்து வைரலாகி வருகின்றனர்.

sivadhanush

வெற்றிமாறன் ஒரு மேடையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்காக ஒரு கதை சொல்ல வேண்டும் என தனுஷ் கேட்ட விவகாரம் குறித்து பேசி இருப்பார். அதை பார்த்து ரசிகர்கள் தூக்கிவிட்டு ஏணியை சிவகார்த்திகேயன் மிதிப்பதாக பேசி வருகின்றனர். ஆனால் உண்மையிலேயே நடிகர் தனுஷ் சிவகார்த்திகேயன் மீது மிகுந்த மரியாதை வைத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அப்போ பிக்பாஸ் இவர் தானா? புரோமோ ஷூட்டில் கசிந்த வீடியோ… பக்காவா இருக்காரே!..

அவரை தன்னுடைய மூன்று திரைப்படத்தில் நடிக்க வைத்த போது உனக்கு கோலிவுட் மிகப்பெரிய இடத்தை உருவாக்கும். நீ காமெடி நடிகன் இல்லை. ஹீரோவாக வரவேண்டும் என சொல்லியே முதல் பட வாய்ப்பு கொடுத்திருக்கிறார். 

அது மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனை தூக்கிவிட தன்னுடைய மரியான் திரைப்படத்தில் ஒரு காட்சியில் அப்பா சாமி மற்றும் மகன் சாமி ஆகிய இருவரின் பெயரையும் ஒன்றாக கொண்ட பூ நடிகை உடன் காதலா என்ற ஒரு காட்சியையும் வைத்திருப்பார். அந்த நேரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக நடிகராக தான் இருந்தார். அவரை வளர்த்துவிடவே இப்படி ஒரு காட்சி வைத்ததாகவும் தனுஷ் பேசியிருக்கும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தனுஷின் வீடியோவைக் காண: https://x.com/Kuruviyaaroffl/status/1828686589867999408

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top