Connect with us
dhanush nayanthra

Cinema News

நயன்தாரா விவகாரம் பற்றி எரியுற நேரத்துல தனுஷ் பாங்காக் போயிருக்காராமே… ஏன்னு தெரியுமா?

நயன்தாரா தனுஷ் இடையேயான கொடுக்கல், வாங்கல் பிரச்சனை தான் இன்று சமூக வலைதளங்களில் தீனி. எங்கு திருப்பினாலும் அதுதான் ஓடுகிறது. நாளை நயன்தாராவின் திருமண ஆவணப்படம் வெளியாகிறது.

நயன்தாரா – தனுஷ் 

Also read: கங்குவாக்காக களமிறங்கிய ஜோதிகா!.. அவரையும் விட்டு வைக்காத நெட்டிசன்கள்?!… இப்படி மாட்டிட்டீங்களே!..

இந்த சூழலில் நயன்தாராவின் விமர்சனங்களுக்கு தனுஷ் பதிலடி கொடுப்பார் என்று பார்த்தால் சத்தம் காட்டாமல் இருக்கிறாரே. என்ன செய்கிறார் என்று பார்த்தால் தான் தெரிகிறது. அவர் ஊருலயே இல்லையாம். பாங்காக்ல சூட்டிங்க்ல இருக்காராம். அவரே தயாரித்து இயக்கி நடிக்கும் படம் இட்லி கடை. நித்யா மேனன் அவருக்கு மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தைக் கலைப்படம் போல அணுஅணுவாக செதுக்குகிறார் தனுஷ். இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் நடக்கிறது. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

பாங்காக்

தனுஷ் இயக்குற இட்லி கடை படத்துக்கு பாங்காக் போறாங்களாம். பாங்காக்னு சொன்னாலே யானை தான் நினைவுக்கு வரும். இட்லி கடை படத்துல யானையோட சீன் எதுவும் வைக்கப் போறாங்களான்னு தெரியல என்று பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் ஆங்கர் கேள்வி கேட்கிறார். அதற்கு அவர் சொல்லும் பதில் இதுதான்.

இட்லி கடை படத்துல சத்யராஜ் மிகப்பெரிய பணக்காரராக நடிக்கிறார். அவரோட பங்களாவைக் காட்டுறதுக்கு இங்கே தேடிப் பார்த்துருக்காங்க. அவங்க நினைச்ச மாதிரி அமையல. அதனால பாங்காக்ல ஒரு ஆடம்பரமான பங்களாவைப் பார்த்துருக்காங்க. சத்யராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகளை எல்லாம் படமாக்குறதுக்குத் தான் குறிப்பா தாய்லாந்து போறாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இட்லி கடை

idli kadai

idli kadai

தனுஷ் இயக்கும் நாலாவது படம் இட்லி கடை. இந்தப் படம் வரும் ஏப்ரல் 10, 2025 அன்று வெளியாகிறது. படத்திற்கு இசை அமைத்தவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர் தனுஷ் உடன் 9வது முறையாக இணைகிறார். தனுஷூக்கு இது 52வது படம். படத்திற்கு கிரண் கௌஷிக் ஒளிப்பதிவை செய்கிறார். பிரசன்னா எடிட்டராகப் பணியாற்றி வருகிறார்.

Also read: அமரன்ல பாதி கூட கலெக்ஷனை எட்டாத கங்குவா… தனுஷால தப்பித்த சூர்யா!

இந்தப் படத்தின் கதை அம்சம் கிராமப்புறங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தனுஷ் இயக்கத்தில் வந்த 2படங்களுமே ஹிட். இதுவும் நிச்சயமாக வெற்றி பெறும் என்றே தெரிகிறது. ப.பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் மட்டும் வெளியாகத் தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top