தொடர்ச்சியாக ஓடிடி தளங்களில் படங்கள் வெளியீடு, அந்த திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பை பெறவில்லை. இதனால் துவண்டு போயிருந்த தனுஷிற்கு தற்போது ஓர் புது தெம்பாய் வெளியாகி உள்ளது திருச்சிற்றம்பலம் திரைப்படம். இந்த திரைப்படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று நல்ல வசூலையும் கொடுத்து வருகிறது.
வித்தியாசமான கதைக்களம், பிரம்மாண்டமான காட்சிகள் என எதுவும் இன்றி, அமைதியாக ஒரு நடுத்தர இளைஞன் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை வைத்து அருமையாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் மித்ரன் ஜவஹர்.
இந்த திரைப்படம் முதலில் தனுஷ் தயாரிப்பில் அவரே நடிக்க இருந்ததாம். அப்போது நித்யா மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது நயன்தாராவும், ராசி கண்ணா கதாபாத்திரத்தில் ஹன்ஷிகாவும், பிரியா பவானிசங்கர் கதாபாத்திரத்தில் சமந்தாவும், நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாம்.
ஆனால் ஏனோ சில காரணங்களால் அப்போது தனுஷ் படம் நிறுவனம் இயங்காமல் இருந்ததால், அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் சன் பிக்சர்ஸ் அந்த கதைக்களத்தை கையில் எடுத்து, திருச்சிற்றம்பலம் எனும் பெயரில் தற்போது ரிலீஸ் செய்து உள்ளது.
இதையும் படியுங்களேன் – எனக்கு கரெக்ட்டா அன்னைக்கு தான் அந்த 3 நாள்.. ஓப்பனாக கூறிய வாணி போஜன்..
இதனை கேட்ட ரசிகர்கள் உண்மையில் நிம்மதி பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் நயன்தாரா நடிக்க இருந்த அந்த கதாபாத்திரத்தில் நித்தியா மேனன் ஷோபனாவாக வாழ்ந்திருப்பார். அந்த அளவுக்கு எதார்த்தமாகவும் கலகலப்பாகவும் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். நித்யா மேனன் நடித்த அளவுக்கு நயன்தாரா நடிப்பாரா என்றால் சந்தேகமே என கூறுகிறார்கள் இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…