
Cinema News
சிம்புவிடம் கதை சொன்னதால் கடுப்பான தனுஷ்?… வெற்றிமாறனை எப்படியெல்லாம் டார்ச்சர் செய்தார் தெரியுமா?
Published on
வெற்றிமாறன் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் தனுஷ் நடித்த “பொல்லாதவன்”. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தனுஷை வைத்து “ஆடுகளம்” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தனுஷுக்கு பெற்றுத்தந்தது. மேலும் இத்திரைப்படம் 6 தேசிய விருதுகளை பெற்று இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.
வட சென்னை 2
இதனை தொடர்ந்து வெற்றிமாறனுக்கும் தனுஷுக்கும் நல்ல நெருக்கம் உருவானது. வெற்றிமாறன் இயக்கிய “விசாரணை” திரைப்படத்தை தனுஷ்தான் தயாரித்தார். அதன் பின் வெற்றிமாறன் “வடச்சென்னை” திரைப்படத்தை இயக்கினார். “வட சென்னை” திரைப்படம் முதல் பாகம் மட்டுமே வெளிவந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இரண்டாம் பாகத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு கூட “வட சென்னை 2” எப்போது வரும் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் “வட சென்னை” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது வெற்றிமாறனை தனுஷ் டார்ச்சர் செய்ததாக ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
சிம்புவுக்கு சொன்ன கதை
அதாவது “வட சென்னை” திரைப்படத்திற்கு முதலில் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் கால்ஷீட் நாட்களை தரவில்லையாம். ஆதலால் திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருந்ததாம்.
ஆதலால் வெற்றிமாறன் இப்போதைக்கு சிம்புவை வைத்து படம் இயக்கலாம் என முடிவு செய்து சிம்புவிடம் ஒரு கதையை கூறினாராம். இந்த விஷயம் தனுஷிற்கு தெரிய வந்திருக்கிறது.
இதன் பின் சில நாட்களிலேயே தனுஷ் கால்ஷீட் நாட்களை தந்திருக்கிறார். அதன் பின் சிம்புவை வைத்து படம் இயக்குவதை கைவிட்டுவிட்டு “வட சென்னை” படப்பிடிப்பை தொடங்கினார் வெற்றிமாறன். ஆனால் தனுஷ் படப்பிடிப்புக்கு சரியாக வராமல் போங்கு காட்டி வந்தாராம். ஒரு நாள் காலை 11 மணி ஆகியும் தனுஷ் படப்பிடிப்பிற்கு வரவில்லையாம்.
வெற்றிமாறனை காண்டாக்கிய தனுஷ்
திடீரென தனுஷ் வெற்றிமாறனுக்கு தொடர்புகொண்டு, “வெற்றி, நான் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். எப்படி இருக்கிறது என்று கூறுங்கள்” என கூறினாராம். இதனை கேட்டதும் கடுப்பாகிவிட்டாராம் வெற்றிமாறன்.
“சார் இங்க ஷூட்டிங் வச்சிருக்கோம். நீங்க என்னன்னா ஷூட்டிங் வராம இருக்குறீங்களே?” என்று கேட்க, அதற்கு தனுஷ், “ஷூட்டிங் கிடக்குது. நாளைக்கு ஷூட்டிங் வச்சிக்குவோம்” என கூறினாராம். இவ்வாறு அடிக்கடி வெற்றிமாறனை காண்டாக்குவாராம் தனுஷ்.
இதையும் படிங்க: வெற்றிமாறனை கட்டம் கட்டி பழிவாங்கிய பிரபல நடிகர்… இருவருக்கும் இப்படி ஒரு வெறுப்பு இருக்கா? என்னப்பா சொல்றீங்க?
ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு : மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி...
தீயாய் வேலை செய்யும் விஜய் : விஜய் பேச்சில் ஏற்பட்ட தடுமாற்றம் : விஜயின் பேச்சு பல விமர்சனங்களை சந்தித்தாலும் இன்று...
சினிமா நடிகர் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறி...
Vijay TVK: திருச்சியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்த விஜய் இன்று நாமக்கல் , கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. தன்னுடைய படங்களில் புதுமை புகுத்தி அதுவரை வந்து கொண்டிருந்த படங்களிலிருந்து...