தனுஷ் மிகவும் திறமையானவர். அற்புதமானவர். நல்லவர். பிரமிப்பை ஏற்படுத்துகிறார்.
இந்திய சினிமாவில் சாதனை படைத்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். சாதாரண நடிகராக மட்டுமில்லாமல் சர்வதேச நடிகராக திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் இருந்து வந்து ஹாலிவுட், பாலிவுட் என அனைத்து பரிணாமங்களையும் பெற்று தற்போது நேரடியாக டோலிவுட்டில் களம் இறங்குகிறார் நடிகர் தனுஷ்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஹாலிவுட் படமான தி கிரே மேன் படம் உலக அளவில் பெருமையாக பேசப்பட்டது. மேலும் அங்கு அவருக்கு கிடைத்த அங்கீகாரம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவிற்கும் பெருமையை தேடித் தந்தது.
மேலும் இவர் நடிப்பில் தயாராகி வரும் திருச்சிற்றம்பலம் படம் வருகிற 18 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனுஷை பற்றி மிகவும் பெருமிதமாக பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் தனுஷ் மிகவும் திறமையானவர். அற்புதமானவர். ஒவ்வொரு முறையும் அவரை எந்த வேடத்தில் பார்த்தாலும் அவரும் அவரது நடிப்பு வேறு லெவலாக இருக்கிறது. அவர்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். சர்வதேச அளவில் பெருமை படைத்து வரும் நடிகர் தனுஷிற்கு பிரபலங்கள் பலரும் இப்போது ரசிகர்களாக மாறிவருகிறார்கள்.
அந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்: https://twitter.com/KareenaUpdates/status/1554523685796454400?s=20&t=XwpGmXFDE29NiMp0orUgAA
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…