×

ஜகமே தந்திரம்... கொலகாண்டு... டீசரையும் கண்டுக்காத தனுஷ்! 

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 
 

கேங்ஸ்டர் படமான ஜகமே தந்திரம் படம் ஷூட்டிங் முடிந்து கடந்தாண்டு மே ஒன்றாம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனாவால் ரிலீஸ் தள்ளிப்போனது. இடையில், சூரரைப் போற்று போல ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு பேசிவருவதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிருப்தியடையச் செய்தது. 


மாஸ்டர் கொடுத்த நம்பிக்கையால் படம் தியேட்டர்களில் வெளியாகும் என ரசிகர்கள் நினைத்தனர். தியேட்டர்களிலேயே வெளியாக வேண்டும் என்ற தனது ஆசையையும் தனுஷ் வெளிப்படையாகவே ட்விட்டரில் வெளியிட்டார். ஆனால், தயாரிப்பு தரப்பில் இது எதையும் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள். 


இந்தநிலையில், படம் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் ரிலீஸாகும் என்று டீசருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இதனால், தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் ரொம்பவே அப்செட் என்கிறார்கள். தயாரிப்பு தரப்போ எந்த ரிஸ்கும் இல்லாமல் ஒரே பேமெண்டில் லாபத்தைப் பார்த்துவிட்டது என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.


தயாரிப்பு தரப்பின் இந்த செயலால் கொதித்துப் போயிருக்கும் தனுஷ், அதனால்தான் டீசரைக் கூட தனது சோசியல் மீடியா பக்கங்களில் இதுவரை வெளியிடவில்லை என்கிறார்கள். படம் மார்ச் 26-ம் தேதி வாக்கில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்பதே இப்போதைய நிலை.

From around the web

Trending Videos

Tamilnadu News