×

தனுஷ் எல்லாம் அவ்வளவு வொர்த் இல்ல…. வாரி கொடுத்த சன் பிக்சர்ஸ் – கடுப்பான தயாரிப்பாளர்கள்!

நடிகர் தனுஷின் சம்பளத்தை 25 கோடியாக உயர்த்தியுள்ளதாம் சன் பிக்சர்ஸ்.

 

நடிகர் தனுஷின் சம்பளத்தை 25 கோடியாக உயர்த்தியுள்ளதாம் சன் பிக்சர்ஸ்.

நடிகர் தனுஷ் வரிசையாக இப்போது பல படங்களில் நடித்து வருகிறார். அனைத்துப் படங்களின் உருவாக்கத்திலும் முன்னணி இயக்குனர்களும், முன்னணி தயாரிப்பாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.  இவ்வளவு நாள் வரையில் தனுஷ் படத்தின் வியாபாரத்தைப் பொறுத்து அவர் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வந்தார்..

ஆனால் இப்போது சன் பிக்சர்ஸ் தனுஷை வைத்து ஒரு படம் எடுக்க உள்ள நிலையில் அவரின் சம்பளத்தை பல மடங்கு ஏற்றி விட்டுள்ளதாம். அவர்கள் தனுஷிடம் 40 கோடி ரூபாயைக் கொடுத்து 25 கோடியை சம்பளமாக எடுத்துக்கொள்ள சொல்லி மீதி 15 கோடியில் படம் எடுத்துத் தர சொல்கிறார்களாம். இது தனுஷுக்கே இன்ப அதிர்ச்சியாய் அமைய, இப்போது மற்ற தயாரிப்பாளர்களிடமும் அதே சம்பளத்தை எதிர்பார்க்கிறாராம் தனுஷ். ஆனால் தனுஷுக்கு அவ்வளவெல்லாம் மார்க்கெட் இல்லை என புலம்புகிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News