×

மாசாக வெளிவந்த தனுஷின் ஜகமே தந்திரம் டிரைலர்... கொண்டாடும் ரசிகர்கள்!...

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ட்ரைலர் வெளியாகிவிட்டது. இதையடுத்து தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்தில் உள்ளார்கள்.
 
maxresdefault

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகிறது. 

கடந்த பிப்ரவரி 22 ஆம் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த வாரம் இப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி கவனம் ஈர்ததது.

இந்நிலையில், தனுஷ் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தருணம் வந்துவிட்டது. தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ட்ரைலர் வெளியாகிவிட்டது. இதையடுத்து தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்தில் உள்ளார்கள்.

இன்று படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. மாசாக ரிலீசாகியிருக்கும் ட்ரைலர் அனைவரது ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. அசால்டான நடிப்பில் அவருக்கே உரிய பாணியில் தனுஷ் பட்டையைக் கிளப்பியுள்ளார் என்பதை ட்ரைலரை பார்த்தே தெரிந்துகொள்ள முடிகிறது. 

கொரோனா காலம் துவங்கியதிலிருந்தே பல தமிழ் திரைப்படங்கள் ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியாகி வருகின்றன. எனினும், ஜகமே தந்திரம் படத்துக்கு ஒரு தனிச் சிறப்பு உள்ளது. இது வரை ஓ.டி.டி தளத்தில் நடக்காத வகையில், இப்படம் 17 மொழிகளில் டப் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுடன் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News