டிராப்பானதா தனுஷ் - 'ஜன நாயகன்' இயக்குநர் ஹெச்.வினோத் படம்?
Jul 21, 2026, 19:43 IST
நடிகர் தனுஷ் இப்போது ராஜ்குமார் பெரியசாமியின் 'ஓம்' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப்போகும் 'தமிழ் முருகன்' படத்தின் அறிவிப்பு வந்தது.
இதுபோக இன்னும் சில படங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு தனுஷின் லைன் அப்பில் இருக்கிறது. இந்த லிஸ்ட்டில் இல்லாத ஒன்று, ஹெச்.வினோத் படம் தான்.
இதை '7 ஸ்கிரீன் ஸ்டுடியோ' தயாரிப்பதாக இருந்தது. ஆனால், அறிவிப்பு வராமலே இருந்தது. இன்று இதற்கு ஒரு முடிவு தெரிந்திருக்கிறது.
அதிக பட்ஜெட் காரணமாக இப்படம் டிராப்பாகி விட்டதாம். ஹெச்.வினோத் தமிழக முதல்வர் விஜய்யை வைத்து இயக்கியிருக்கும் 'ஜன நாயகன்' வருகிற ஜூலை 23-ஆம் தேதி வெளியாகப்போவது குறிப்பிடத்தக்கது.
