தயவு செய்து அந்த தப்பை மட்டும் செய்துவிடாதீர்கள்- கர இயக்குனரின் வேண்டுகோள்
தனுஷ் நடிப்பில் அடுத்து வர உள்ள படம் கர. போர் தொழில் படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும் கே.எஸ்.ரவிகுமார், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, கருணாஸ், பிரித்வி பாண்டியராஜன் என ஒரு மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் இணைந்து நடித்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் தனுஷ் வித்தியாசமான திருடன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படம் வரும் ஏப்ரல் 30-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
இந்த நிலையில் கர படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில் , திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் தயவுசெய்து படம் தொடங்கும் நேரத்திற்கு முன்பாகவே வந்து சீட்டுகளில் அமர்ந்துவிடுங்கள். படத்தின் கதை முதல் காட்சியிலேயே நேரடியாகத் தொடங்கிவிடும். எனவே, சிறிது தாமதமாக வந்தாலும் நீங்கள் கதையின் முக்கியத் தொடர்பை ஆரம்பத்திலேயே இழக்க நேரிடும்.
அதே சமயம் திரையரங்கில் படம் பார்க்கும் ரசிகர்கள் தயவுசெய்து இடைவேளை காட்சிகளையோ அல்லது படத்தின் கதையையோ சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம். அது மற்ற ரசிகர்களின் சுவாரஸ்யத்தைக் குறைத்துவிடும் என்று கூறியுள்ளார். அதேபோல, இடைவேளை முடிந்து இரண்டாம் பாதி தொடங்கும்போதும் உடனடியாக உங்கள் இருக்கைகளுக்குத் திரும்பிவிடுங்கள் என்றும் கூறியுள்ளார்.
