Kara Review: தனுஷின் கர எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ

 
Kara Review: தனுஷின் கர எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் கர. போர் தொழில் வெற்றிபடத்தை இயக்கிய் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷுடன் மமிதா பைஜு, கே.எஸ்.ரவிகுமார், கருணாஸ், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற ஏப்ரம் 30ம் தேதி இப்படம் வெளியாகிறது. படத்தின் முதல் பார்வை மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ரு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்த நிலையில் கர படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளரான திருச்சி ஸ்ரீதர், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்பக்கத்தில் 'கர' படம் குறித்த முதல் விமர்சனத்தைப் பகிர்ந்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து தமக்குக் கிடைத்த பிரத்யேக தகவல்களின் அடிப்படையில் இந்த விமர்சனத்தை அவர் பதிவு செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், கர படத்தின் முதல் பாதி மிகவும் சிறப்பாக வந்துள்ளது. இரண்டாம் பாதி ஓகே என்ற அளவில் உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இது தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் என்டர்டெயின்மென்ட் படமாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் கருணாஸ் ஆகியோரின் நடிப்பு இந்தப் படத்தில் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் திருச்சி ஸ்ரீதர் தனது பதிவில் பாராட்டியுள்ளார்.

Kara Review: தனுஷின் கர எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ

இறுதியில் கர திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.

From Around the web