தமிழ் சினிமாவில் வேண்டா வெறுப்பாய் நடிக்க வந்து, தற்போது அதில் தனது திறமையை முழுதாக வெளிக்கொணர்ந்து, தற்போது தமிழை தாண்டி டோலிவுட், பாலிவுட் , ஹாலிவுட் என கொடி கட்டி பறந்து வருகிறார் தனுஷ்.
இவர் தற்போது தமிழ் & தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி, தமிழில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹாலிவுட்டில் நடித்து முடித்துள்ள திரைப்படம் தி க்ரே மேன்.
இந்த படத்தை அவென்ஜர்ஸ் எண்டுகேம் எனும் பிரமாண்ட திரைப்படத்தை இயக்கிய ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கி உள்ளனர். க்ரிஷ்எவன்ஸ், ரேயான் கோஸ்லிங் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க தனுஷ் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதையும் படியுங்களேன் – வடசென்னை 2-க்கே இன்னும் விடை தெரியல., விடுதலை-2 வருதாம்.! பிளான் போட்டார் வெற்றிமாறன்.!?
ஆக்சன் படமாக உருவாகி உள்ள இந்த திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு என 2 சண்டைக்காட்சிகள் இருப்பதாக படத்தின் இயக்குனர்கள் அண்மையில் தெரிவித்து இருந்தனர்.
நேற்று இந்த படத்த்தின் பட்ஜெட் விவரம் வெளியாகி அனைவரையும் வாயடைக்க செய்துவிட்டது. இப்படத்தின் பட்ஜெட் 200 மில்லியன் அமெரிக்க டாலராம். அதாவது இந்திய மதிப்பின் படி, சுமார் 1500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…