"தானை பின் தொடர, யானை மீதேறி வருகிறான்"... 'DxV' படத்தில் தனுஷுடன் 2-வது முறையாக கைகோர்க்கும் பிரபல இயக்குநர்!

 
DxV Dhanush

நடிகர் தனுஷ் கடந்த மூன்று நாட்களாக DxV என்ற எழுதப்பட்ட போஸ்டர்களை எக்ஸ் தளத்தில் ஷேர் செய்த வண்ணமுள்ளார். இன்று போஸ்டரை வெளியிட்டு "தானை பின் தொடர, யானை மீதேறி வருகிறான்" என்று பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான விரிவான அறிவிப்பு நாளை (ஜூலை 10-ஆம் தேதி) தான் வரவிருக்கிறது. இம்மூன்று போஸ்டர்களையும் இசையமைப்பாளர் சாய் அபயங்கரும் ஷேரிட்டு, அவர் தான் இப்படத்திற்கு இசை என உறுதிபடுத்தியுள்ளார்

.

ஆனால், அந்த V தான் யார்? என இப்போது எல்லாரும் யோசித்து கொண்டிருக்கிறார்கள். இது இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ஹெச்.வினோத், வெற்றிமாறன்-ஆக இருக்கலாம் என சொல்லப்பட்டு வந்தது. மேலும், சிலர் தனுஷ் இயக்கப்போகும் ஐந்தாவது படம் என்று சொன்னார்கள்.

Vaathi venky atluri vishwanath and sons

தற்போது, இது குறித்து தனுஷின் நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரித்தபோது, இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கப்போவதாக கூறுகிறார்கள். இவர் ஏற்கனவே தனுஷை வைத்து இயக்கிய 'வாத்தி' படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. வெங்கி சூர்யாவை வைத்து இயக்கியிருக்கும் புதிய படமான 'விஸ்வநாத் & சன்ஸ்' வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போவது குறிப்பிடத்தக்கது.

From Around the web