அலாக்கா லூவா unplugged வெர்ஷனை வெளியிட்ட சாய் அபயங்கர்!
Aug 12, 2026, 20:13 IST
'டியூட், கருப்பு' படங்களின் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவர் இப்போது பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
அதில் ஒரு படம் தான் 'ஓம்'. இதில் ஹீரோவாக தனுஷ் நடிக்கிறார். இதை ராஜ்குமார் பெரியசாமி இயக்கிக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில், இதன் முதல் சிங்கிள் ட்ராக் 'அலாக்கா லூவா'-வை வெளியிட்டிருந்தார்கள். ரோகேஷ் எழுதிய இப்பாடலை சாய் அபயங்கரே பாடியிருந்தார்.
Makkale enn thangame sondhame 🫶🏼
— abhyankkar (@SaiAbhyankkar) August 12, 2026
Here is #alakaalovaa unplugged ♥️ pic.twitter.com/yFBOpgEEet
இந்த பாடல் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்தது. தற்போது, சாய் அபயங்கர் எக்ஸ் தளத்தில் இதன் unplugged வெர்ஷனை வெளியிட்டுள்ளார்.