3 நாட்களில் ரூ.85 கோடியை தாண்டிய ஓம்
தனுஷ் நடிப்பில் கந்த வெள்ளி அன்று வெளியான படம் ஓம். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி, மம்முட்டி, ஸ்ரீலீலா உ ள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தனுஷ் அரசியல் பிஅரவேசம் குறித்த தகவல்களுக்கு மத்தியில் பெரிய எதிர்பார்ப்பியில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியான இப்படம், மூன்றே நாட்களில் உலகளவில் ரூ.85 கோடியை தாண்டியுள்ளது.
படத்தின் மூன்றாவது நாள் வசூல் நிலவரப்படி, இந்தியாவில் மட்டும் ரூ.15.90 கோடி நிகர வசூல் செய்துள்ளது. மொத்தம் 6,546 காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில், தமிழில் 3,782 காட்சிகள் மூலம் ரூ.11.55 கோடியும், தெலுங்கில் 1,658 காட்சிகள் மூலம் ரூ.3.80 கோடியும் வசூலாகியுள்ளது. இந்தியில் 1,106 காட்சிகள் மூலம் ரூ.55 லட்சம் கிடைத்துள்ளது.
இதன் மூலம் முதல் மூன்று நாட்களில் இந்தியாவில் இப்படத்தின் மொத்த நிகர வசூல் ரூ.50.25 கோடியாகவும், மொத்த வசூல் ரூ.58.30 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. மூன்றாவது நாளில் மட்டும் வெளிநாடுகளில் ரூ.5 கோடி வசூலித்துள்ள நிலையில், இதுவரையிலான வெளிநாட்டு வசூல் ரூ.27 கோடியை எட்டியுள்ளது. இதனால் ஓம் படத்தின் மூன்று நாள் உலகளாவிய வசூல் ரூ.85.30 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும், மூன்றாவது நாளில் மட்டும் சுமார் 12.39 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் மூன்று நாட்களில் மொத்தமாக சுமார் 38.87 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. மூன்று நாட்களிலேயே ரூ.85 கோடியை கடந்துள்ள இப்படம், அடுத்ததாக ரூ.100 கோடி வசூலை விரைவில் எட்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
